மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 13 ஆக 2020

திருட்டுப் பயலே 2: கேமராவின் ரகசியக் குரல்!

  திருட்டுப் பயலே 2: கேமராவின் ரகசியக் குரல்!

விளம்பரம்

திருட்டுப்பயலே 2 படத்துல கதை, ஸ்கிரீன்பிளே, டயலாக், கேரக்டர் இப்படி எல்லாமே பவர்ஃபுல்லா இருக்கும்போது கேமராவை மட்டும் எப்படி சும்மா விடமுடியும். அதான் புகுந்து விளையாடிட்டோம். படம் பாத்தவங்க நிறைய பேர் நிறைய பாராட்டுனாங்க. அந்த பாராட்டுக்குப் பின்னால எந்த மாதிரியான வொர்க் இருந்ததுன்னு மின்னம்பலம் மூலமா இன்னைக்கு உங்ககிட்ட சொல்லப்போறோம். நான் உங்க கேமராமேன் செல்லதுரை.

படம் முடிஞ்சதுமே சுசி கணேசன் சார் என்னைக் கூப்பிட்டு ‘நான் சொன்னதைவிட 100 பர்சண்ட் அதிகமாவே பண்ணிட்ட’ அப்படின்னு பாராட்டினார். அதுவே நிறைவா இருந்தது. இன்னைக்கு மக்கள் பாராட்டுறதையெல்லாம் எனக்குள்ள சேர்க்கமுடியாம திண்டாடிக்கிட்டு இருக்கேன். அவருடைய விரும்புகிறேன் படத்துல கே.வி.ஆனந்த் சார்கிட்ட அசிஸ்டண்ட் கேமராமேனா வொர்க் பண்ணேன். அப்பவே அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

இன்னைக்கு படம் பண்றவங்க எல்லாரும் இந்த ஊர் நம்மளை ஏத்துக்குமான்னு யோசிச்சிக்கிட்டே பண்றாங்க. ஆனால், இவர் இப்ப ஒவ்வொரு குடும்பத்துக்குள்ளவும் போய்ட்டாரு. எந்த பிள்ளையாவது இந்தப் படத்தைப் பார்த்துட்டு தன்னுடைய பிரச்சினையை வீட்டுல சொன்னா, அவங்க முதல்ல நன்றி சொல்லிக்கிறது சுசி கணேசன் சாருக்கு தான். இதைவிட ஒரு இயக்குநருக்கு என்ன சிறப்பு வேணும் சொல்லுங்க. அவர் படம் பண்றதுல மட்டும் ஸ்பெஷல் கிடையாது. ஒவ்வொரு கேரக்டரை உருவாக்கவும், அவங்களை எப்படி மக்கள்கிட்ட அறிமுகப்படுத்துறதுன்னும் முழு படத்துக்கு செய்யவேண்டிய வொர்க்கை பண்ணுவாரு.

ஒரு பாடல் வரியை, இசை டாமினேட் பண்ணக்கூடாது. பாடல் வரி சொல்லும் ஃபீலிங்கை அந்த இசை எடுத்துக்கொடுக்கணும். அந்தமாதிரி தான் கேமராவும். படத்துடைய கதையை டாமினேட் பண்ணக்கூடாது. கதை சோகமா போகும்போது பளீர்ன்னு காட்டுனோம்னா அந்த ஃபீலிங் எப்படி ஆடியன்ஸ் கிட்ட பாஸ் ஆகும். அதனால தான் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கலர் செட் பண்ணோம்.

எவன் எக்கேடு கெட்டாலும் என் வாழ்க்கை சந்தோஷமா இருக்கணும்னு நினைக்குற பிரசன்னா வீடும் சரி, அவர் இருக்க இடமும் சரி கலர்ஃபுல்லாவே இருக்கும். பாபி சிம்ஹா அப்படி இல்லை. தன்னுடைய வேலை, பர்சனல் முதற்கொண்டு எல்லாத்தையும் ரகசியமாவே வெச்சிருப்பாரு. அதனால மேக்சிமம் அவர் இருட்டுலயே இருப்பாரு. இந்த அமலா பால் ரொம்ப பாவம். சந்தோஷத்தை இழுக்குறதா நினைச்சு பிரச்சினையை வலிய தேடிக்குவாங்க. அதனால தான் முதல் சீன்ல புடவையை கசக்கிடாதன்னு சொல்லும்போது அவங்களை கலராவும், அவங்களை சுத்தி இருக்க இடத்தை டல்லாகவும் காட்டியிருப்போம்.

ஒவ்வொரு கேரக்டரும் ஒவ்வொரு வீட்டுக்குள்ள தான் வாழும். அந்த கேரக்டருக்கு தேவையான இடம் போக மீதி எல்லாமே கேமராவுக்குத்தான். ஆனாலும், கோட்ரஸுக்குள்ள எடுத்த ஷாட் எல்லாம் கஷ்டமா இருந்தது. அஞ்சுக்கு அஞ்சு ரூமுக்குள்ள எவ்வளவு சுத்தமுடியும். அதனால அந்த வீட்டை செட் போட்டு எடுத்தோம். புருஷன் பொண்டாட்டி தனியா இருக்க சீன் எல்லாம் கிரே மூட்ல இருக்கும். பிரசன்னா கிட்ட மாட்டிக்கிட்டு அமலா பால் சோகமா இருக்க சீன் எல்லாம் ரொம்ப இருட்டா இருக்கும். அமலா பால் தம்பிகிட்ட விஷயத்தை சொல்லி அழுகுற சீன் பாத்தீங்கன்னா நல்லா புரிஞ்சிடும். இப்படித்தான். ஒவ்வொரு கேரக்டர் பேசுறதையே கேமரா வழியாகவும் பேசியிருக்கோம். அதுல ஒரு முக்கியமான சீன் பிரசன்னாவும், அமலா பாலும் வீடியோவில் பேசிக்கிறது. அந்த சீன்ல ரெண்டு பேருமே ரொம்ப சந்தோஷமா பேசுவாங்க. தனக்கு நல்ல சமையல் கிடைக்குதுன்னு அமலா பாலும், தனக்கு நல்ல சாப்பாடு கிடைக்குதுன்னு பிரசன்னாவும் நினைக்குற ரொமாண்டிக்கான சீன். அதுக்கு மட்டும் ஃபுல் கலர் பண்ணியிருப்போம். இப்படித்தான் ஒவ்வொரு கேரக்டருக்கும் தனித்தனியா கலர்டோன் கொடுத்திருக்கோம்.

சுசி கணேசன் சார் தான் இந்த அவுட்புட்டுக்கு சொந்தக்காரர். இவரை மாதிரி எல்லா விதமான படமும் பண்ண ஆள் இல்லை இப்ப. விரும்புகிறேன் படத்துக்கு ஒரு சீன்ல கரும்புக் காட்டை கொளுத்தி ஷூட் பண்ணாங்க. அப்ப தீ அதிகமாகி யூனிட்ல எல்லாரும் ஓடுனப்ப, இன்னொரு கேமரால உக்காந்திருந்த நான் எழுந்து போகாம ஷூட் பண்ணேன். அப்படியே ஓடிவந்து கட்டிப்புடிச்சிக்கிட்டார். அந்த பாசம் தான் ஊருக்கு வந்ததும் ஃபோன் போட்டு, வாங்க செல்லதுரை படம் பண்ணலாம்னு சொல்ல வைத்தது. என்னுடைய அந்த ஈடுபாடு தெரிந்து தான் காரைக்குடி ஷூட்டிங்கிலும் ஒரு வேலை பண்ண வெச்சார்.

ஷூட்டிங்குக்கு கேரக்டர் எல்லாம் ரெடியாகிட்டு இருந்த சமயம், திடீர்னு மழை பெய்தது. சுசி சார் ஓடிவந்து செல்லதுரை கேமராவை எடுன்னு சொல்லி பாபி சிம்ஹாவை நடிக்க சொல்லிட்டாரு. அந்த சீன் தான், காரைக்குடில இருந்து டிரான்ஸ்ஃபர் ஆகி பாபி சிம்ஹா கிளம்பும்போது ‘நேரா வளரும் செடியைதான் முதல்ல வெட்டுவாங்க’ அப்படின்னு அவர் பேசுறது. அந்த சீன் ரொம்ப டெப்தா பச்சை பசேல்னு எடுத்திருப்போம். அத்தனை லைவ் ஷாட்டா இருக்கும்.

படத்துல பேசியிருக்கிறது யாரோ 3 பேருடைய உணர்வு மட்டுமில்லை. பாதிக்கப்பட்டு பேசாமல் இருக்கும் பல ஆயிரக்கணக்கானவர்களுடைய உணர்வு. அப்படி சோஷியல் மீடியாவுக்கு அடிக்டா இருந்தவங்களுக்குத் தெரியும், எந்த ராத்திரில லேப்டாப் வெளிச்சத்துல மட்டும் உட்கார்ந்து வேலை செய்த சூழல். இவ்வளவு விஷயங்களையும் சுசி சார் நோட் பண்ணி வெச்சிருந்து சொல்ல சொல்ல ஒவ்வொரு சீன்லயும் கொண்டுவந்தோம். அதைப் பார்த்த மக்கள், நாங்க சொல்ல வந்ததை புரிஞ்சிக்கிட்டது எங்க வெற்றி. நாங்க ஜெயிச்சிட்டோம்.

விளம்பர பகுதி

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon