மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 20 ஜன 2020

ஆளுங்கட்சி சொல்வதைச் செய்கிறார்!

ஆளுங்கட்சி சொல்வதைச் செய்கிறார்!

ஆளுங்கட்சி சொல்வதைச் செய்பவராகத் தேர்தல் அதிகாரி உள்ளதாக திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னையில் இன்று (டிசம்பர் 6 ) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஆளுங்கட்சியின் அத்துமீறல்களுக்குத் தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். தற்போதுகூட 5000 போலி வாக்காளர்கள் உள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

பிரச்சாரம் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு, “7ஆம் தேதி அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. தற்போது, அது 11ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன் பிறகு பிரச்சாரம் தொடங்கும்” என்று அவர் பதிலளித்தார்.

முன்னதாக, தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வைத்த நிலையில் மு.க.ஸ்டாலினும் அதையே வலியுறுத்தியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon