மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 13 ஆக 2020

குமரி: மின்சாரம், குடிநீர் கேட்டு சாலை மறியல்!

குமரி: மின்சாரம், குடிநீர் கேட்டு சாலை மறியல்!

புயல் பாதிப்பு ஏற்பட்டு ஒருவாரம் ஆன நிலையில் தண்ணீர் மற்றும் மின்சார வசதி இல்லாததால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் 30ஆம் தேதி உருவான ஓகி புயல், கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரு வாரத்திற்கு முன்பு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து குமரி மாவட்டம் இன்னும் முழுமையாக மீளவில்லை. தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மின்சார வசதியில்லாமல் மக்கள் தவித்துவருகின்றனர். மின்சாரம் இல்லாததால் குடிநீர் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் லாரி மூலம் குடிநீர் சப்ளையும் வழங்கப்பட்டுவருகிறது. பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு சீரமைப்பு பணிகளும் நடைபெற்றுவருகிறது. என்றாலும், பல பகுதிகளில் இன்னமும் இயல்வு வாழ்க்கை திரும்பவில்லை.

இந்நிலையில் இன்று (டிசம்பர் 06) நாகர்கோவில் நகராட்சி 20ஆவது வார்டுக்கு உட்பட்ட பறக்கை காந்திபுரத்தைச் சேர்ந்த மக்கள், பறக்கை-மணக்குடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு, தங்கள் பகுதிக்கு உடனே குடிநீர், மின்சார வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஒவ்வொரு பகுதியாகச் சீரமைக்கப்பட்டு குடிநீர், மின்சாரம் வழங்கப்பட்டுவருவதாகவும், இந்தப் பகுதியிலும் சீரமைப்புப் பணி முடிக்கப்பட்டு நிலைமை சீராகும் எனவும் அவர்கள் கூறினர். ஆனால் பொது மக்கள் அதை ஏற்கவில்லை. தங்கள் பகுதிக்கு இதுவரை எந்த அதிகாரியும் வரவில்லை; லாரி மூலம் குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை; உடனே இதற்கு நடவடிக்கை எடுத்தால்தான் போராட்டம் கைவிடப்படும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon