மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 நவ 2020

சோலார் துறையையும் விட்டுவைக்காத பதஞ்சலி!

சோலார் துறையையும் விட்டுவைக்காத பதஞ்சலி!

ரூ.100 கோடி முதலீட்டில் சோலார் துறையில் களமிறங்கப்போவதாகப் பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.

வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் பல்வேறு துறைகளில் காலூன்றி வருகிறது. அதன்படி தற்போது சோலார் மின் உற்பத்தி உபகரணங்கள் தயாரிப்பிலும் பதஞ்சலி இறங்கியுள்ளது. இதுகுறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்துக்குப் பதஞ்சலி நிறுவனத் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா அளித்துள்ள பேட்டி ஒன்றில், “உள்நாட்டில் தன்னாட்சி இயக்கத்தை மையமாகக் கொண்டு சோலார் துறையில் களமிறங்கத் திட்டமிட்டுள்ளோம். சோலார் மின்சாரத்தைக் கொண்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் மின்வசதியை ஏற்படுத்தித் தரும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.

தரம்வாய்ந்த சோலார் தகடுகளை நாங்கள் உள்நாட்டிலேயே தயாரித்து வழங்குவோம். ஆனாலும், சீனாவின் சோலார் தகடுகளுடன் கட்டணப் போரில் நாங்கள் ஈடுபடப்போவதில்லை” என்று கூறியுள்ளார். இத்திட்டத்தின் முதற்கட்டமாக அட்வான்ஸ் நேவிகேஷன் & சோலார் டெக்னாலஜீஸ் பிரைவேட் நிறுவனத்தைப் பதஞ்சலி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதற்குச் சொந்தமாக கிரேட்டர் நொய்டா நகரில் உள்ள ஆலையை அடுத்த இரண்டு ஆண்டுகளில் செயல்பாட்டுக்குக் கொண்டு வரவும், இத்துறையில் சுமார் ரூ.100 கோடி முதலீடு செய்யவும் பதஞ்சலி திட்டமிட்டுள்ளது.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon