திருநெல்வேலி டவுண்ல கட்சி காரங்க அதிகாரிகளையெல்லாம் கூட்டிப் போய், பத்திரிகைகாரங்க, டிவிகாரங்க எல்லாத்தையும் வர சொல்லி மொத்தம் இருபது கேமரா புடை சூழ, கொஞ்சம் இலை தளைகளை அப்படியே மழைச் சாரல் போல தூவி விட்டு ஆளுநர் விளக்கமாத்தை கையில வச்சு போஸ் கொடுத்துகிட்டு இருக்காரு. என்னப்பா இங்க நடக்குதுன்னு கேட்டா ஏதோ ‘திடீர்’ ஆய்வாம். சார் அங்க இருந்து 30 கிலோமீட்டர்ல ஆயிரக்கணக்கான பேரை காணோம்னு கதறிகிட்டு இருக்காங்க. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள படகு எல்லாம் சேதமாகியிருக்கு, நூற்றுக்கணக்கான ஏக்கர் வாழை எல்லாம் நாசமாயிருக்கு அங்க போய் நின்னு ஆய்வு நடத்துங்க எசமான். முதல்ல மொத்தம் எத்தனை பேர் காணாம போயிருக்காங்கன்னு லிஸ்ட்டாவது எடுங்க. சொல்றது கேக்குதா இல்லையா. அது சரி நீங்க கேட்டாலும் கேட்காத மாதிரி தான இருப்பீங்க. மெல்ல குப்பையை கூட்டுங்க. அங்க என்னப்பா சத்தம், என்னது விஷாலு சுயேட்சைக்கு ஆதரவு கொடுக்குறாரா? உங்களை திருத்தவே முடியாதுப்பா.
Arockiaraj Devasahayam
விஷாலின் வேட்புமனு விவகாரத்தில் நிராகரிக்கப்பட்ட வேண்டும் என கொண்டாடியது யாரெல்லாம் என்று பார்த்தால்... அதிமுக இபிஎஸ்-ஓபிஎஸ் அணி, பாசக, சீமான் கட்சி...
வினோத் களிகை
அரசியல் என்பது நேர்மையான களப்பணி தான். கைக்காசையும் போடக் கூடாது. அதில் சம்பாதிக்கவும் கூடாது.
- வீட்டுவேலை செய்யும் சாமானிய ஏழை பெண்மணி சொனனது.
@Prabakar Kappikulam
இரட்டை இலை சின்னம் கிடைத்த மறுநாளே
இடைத்தேர்தல் அறிவித்தார்கள்
அப்போதே ஆணையத்தின் நம்பகத்தன்மை பல்லிளித்துவிட்டது.
@Kannan_Twitz
மனசு எதனா புதுசா தேடி அலையுதுனா! இப்போ இருக்கறதுல முழு திருப்தி கிடைக்கலன்னு அர்த்தம்.
இப்போ கூட டீ’க்கு வரிக்கி செட் ஆகல பிஸ்கெட் இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்.
@கருப்பு கருணா
விஷாலுக்கு அரசியல் பாடம் போதாது : ஹெச்.ராஜா
ஆமாம் தம்பி...
சாரு அரசியல்ல 138 பி ஹெச் டி வாங்குனவரு. அவருகிட்ட டியூசன் போயி கத்துக்கோப்பா..
@itzmekarthick
வேட்புமனுவை ஏற்றதாக தேர்தல் அலுவலர் கூறியது வீடியோவாக என்னிடம் உள்ளது: விஷால்
tamilrockers : அந்த வீடியோ வ நாங்க ரீலிஸ் பண்ணலமா ????
@நக்கல் மன்னன் 2.0
RK நகரில் 50000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறவோம் -தமிழிசை
ஆர்கே நகரில் எத்தனை வேட்பாளர்கள் இருந்தாலும் மின்னணு இயந்திரம் மூலமே தேர்தல் - தே. அதிகாரி
Prabakar Kappikulam
நெல்லை பேருந்து நிலையத்தில் தமிழக ஆளுநர் திடீர் ஆய்வு
திடீர் ஆய்வுல எப்டிப்பா அத்தனை கேமராக்கள் வந்துச்சு..?
ஒரு #வெளம்பரம்...
@pandiprakash
படிக்காமலேயே கரையானுக்கு இரையாகும் புத்தகம் போலவே, திறமையிருந்தும் அதை வெளிக்காட்டாமல் வாழும் மனிதர்களும்..
@vishnut87
ராகுல் காங் தலைவராகி விட்டார்.ஸ்டாலின் திமுக தலைவராவது எப்போது?? #எச்.ராஜா
பதிலக்கு நீங்க எப்ப சாரணர் இயக்கத்துக்கு தலைவராக போறீங்கனு கேட்டா??
@HAJAMYDEENNKS
மொபைல் தொலைந்துவிட்டால் பாதி பேருக்கு நம்ம நம்பரும் தொலைந்துவிடுகிறது...!
@Keetru Nandhan
அடுத்த மாதம் கல்ச்சுரல்ஸ் டீம் பிரெசிடெண்ட் எலெக்ஷன் வருது...
இதை விஷாலுக்கு மட்டும் தெரியாமல் பார்த்துக்கணும்...
@Shan Karuppusamy
தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான தன்னாட்சி அமைப்பு. அவர்கள் யாருக்கும் அஞ்சாமல் கடமையை மட்டுமே செய்கிறார்கள் - இப்படிக்கு ஆளுங்கட்சிகள்.
@Prabakar Kappikulam
சுயேட்சை வேட்பாளரான ஒரு இளைஞரை ஆதரித்து, வெற்றிபெற வைப்பேன்.
வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நடிகர் விஷால் சவால்.
போங்க தம்பி போங்க... போய் புள்ள குட்டிகள படிக்க வையுங்க...
@devil_girlpriya
விஜயகாந்த் கைது செய்ய பிடிவாரண்ட்..
மல்லையா வை பிடிக்க வாரண்ட் இருக்கா போலிஸ்?
குழந்தையை பிடிக்க வாரண்ட் நாடு கெட்டு போச்சு..
@skpkaruna
முதல் நாள் ஒரு நடிகன் சுயேச்சையாகப் போட்டியிடுகிறேன் என்கிறார். மறுநாள் மனுத்தாக்கல் செய்கிறார். அதற்கடுத்த நாள் அவர் மனு அடாவடியாக தள்ளுபடி செய்யப்படுகிறது. ஜஸ்ட் மூன்றே நாள்! ஒரு நாடறிந்த அரசியல் தலைவனை உருவாக்கி விட்டுருக்காங்க
@aloor_ShaNavas
"விஷாலுக்கு ஆதரவாக கையெழுத்து போட்டது நீங்கள் தானா?" என அந்த இரண்டு பேரையும் அழைத்து விசாரித்த தேர்தல் ஆணையம், அரவக்குறிச்சி - தஞ்சை இடைத்தேர்தலின் போது அதிமுக வேட்பாளர்களுக்காக மருத்துவமனையில் இருந்தவாறு ஜெயலலிதா வைத்த விரல்ரேகை அவரது தானா என விசாரித்ததா?
Prabakar Kappikulam
வருமான வரித்துறைக்கும்
தேர்தல் ஆணையத்துக்கும்
கடும் போட்டியா இருக்கும் போல...
@Keetru Nandhan
ஒரு தொகுதியின் வெற்றியைத் தீர்மானிக்கும் அளவு திரட்சியாக வாழும் சமவெளி மக்களுக்கு ஏதாவது நேர்ந்தாலே, அரசு இயந்திரம் ஆற அமரத்தான் வேலை செய்யும்.
கடற்கரை ஓரங்களில் சிதறி வாழும், தேர்தல் அரசியலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாத மீனவ மக்களுக்காக பதறியா துடித்து விடப் போகிறார்கள்?
-லாக் ஆஃப்