மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

மீனவர்களின் காவல் நீட்டிப்பு!

மீனவர்களின் காவல் நீட்டிப்பு!

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 37 மீனவர்களின் காவலை இலங்கை நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினர் அவர்களைக் கைது செய்வது தொடர்ந்துவருகிறது. சமீபத்தில், பருத்தித் துறை பகுதியில் டிசம்பர் 2ஆம் தேதி மீன் பிடித்துக்கொண்டிருந்த 20 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.

கடந்த 3 மாதங்களில் ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகை, காரைக்கால் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 116 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடித்துச் செல்லப்பட்டு, யாழ்ப்பாணம், வவுனியா சிறைகளில் அடைக்கப்பட்டனர். 37 மீனவர்களின் காவல் நேற்றுடன் (டிசம்பர் 5) முடிவடைந்தது. அவர்கள் காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, 37 மீனவர்களின் காவலை டிசம்பர் 19ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். மீண்டும் மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து டிசம்பர் 5ஆம் தேதி வரை 344 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 64 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon