மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி!

ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி!

ஆகாஷ் சூப்பர்சானிக் ஏவுகணை ஒடிசாவில் நேற்று (டிசம்பர் 5) வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது. இந்திய ராணுவத்தில் ஆகாஷ் ஏவுகணை சேர்க்கப்படுகிறது.

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மே்பாட்டு மையத்தின் (டிஆர்.டி.ஓ.) சார்பில் ஆகாஷ் ஏவுகணை நேற்று ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஏவுதளத்திலிருந்து மதியம் 1.38 மணிக்கு வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் உள்ள இலக்கைத் துல்லியமாக தாக்கவல்லது. 18 கி.மீ. உயரத்தில் பறக்கும் விமானத்தை 30 கி.மீ. தூரத்திலிருந்து தாக்கும் திறன் கொண்டது. ஆளில்லாத குட்டி விமானத்தை வானில் இலக்காக வைத்து ஏவுகணை செலுத்தப்பட்டது. ஆகாஷ் ஏவுகணை குட்டி விமானத்தை வெற்றிகரமாகத் தாக்கியது.

இந்நிகழ்வின் போது, இயக்குநர் ஜெனரல் (ஏவுகணைகள்), டிஆர்டிஓ, பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகர் டாக்டர் ஜி. சதீஷ் ரெட்டி, டிஆர்டிஎல் இயக்குநர் எம்எஸ்ஆர். பிரசாத், நிகழ்ச்சி இயக்குநர் ஜி சந்திர மவுலி; இயக்குநர் ஐடிஆர், டாக்டர் பி.கே.தாஸ் மற்றும் டிஆர்டிஓ விஞ்ஞானிகள் கண்காணித்தனர். டாக்டர் ஜி. சதீஷ் ரெட்டி, விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு தெரிவித்தார்.

ஆகாஷ் ஏவுகணை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் முற்றிலுமாக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது. தானியங்கி வகையைச் சேர்ந்த இந்த ஏவுகணை, ஒரே நேரத்தில் பல திசைகளிலும் சுழன்று வானில் உள்ள பல்வேறு இலக்குகளைத் தாக்கும். இதில், 55 கி.மீ. எடை கொண்ட ஆயுதங்களைப் பொருத்தி அனுப்பலாம். போர் விமானம், குரூஸ் ஏவுகணை, பாலிஸ்டிக் ஏவுகணை போன்றவற்றை முறியடிக்கும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon