மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 29 ஜன 2020

முதல் ஸ்மார்ட்ஃபோன்!

முதல் ஸ்மார்ட்ஃபோன்!

புதிய ஸ்னேப்டிராகன் 845 ப்ராசெஸ்சர் அடுத்த வருடம் வெளியாகும் என குவால்கம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட் போன்கள் இயங்கத் தேவையான மிக முக்கியமான ஒன்று ப்ராசெஸ்சர். அதுவே ஸ்மார்ட் போனின் செயல்திறன், கிராபிக்ஸ், பேட்டரியின் ஆற்றல் பயன்பாடு ஆகியவற்றைக் கையாள்கிறது. ஸ்மார்ட் போன் ப்ராசெஸ்சர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இருக்கும் குவால்கம் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஸ்னேப்டிராகன் 835 ப்ராசெஸ்சர் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது.

பயனர்கள் மத்தியில் இந்த ப்ரோசெஸ்சர் செயல்பாடு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டு மட்டும் இந்த ஸ்னேப்டிராகன் 835 ப்ராசெஸ்சர் கொண்டு சுமார் 10 கோடி ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய 845 ப்ராசெஸ்சரைக் கொண்டு அடுத்த ஆண்டும் ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்படும் என குவால்கம் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள 835 ப்ராசெஸ்சரின் செயல்திறன் மற்றும் கிராபிக்ஸ் வசதிகள் அதிகரிக்கப்பட்டு இந்த புதிய ஸ்னேப்டிராகன் 845 ப்ராசெஸ்சர் வெளியாக உள்ளது. இதில் 4G நெட்வொர்க் அதிவேகமாகச் செயல்படும் வகையில் சிப்களைப் பொருத்தியுள்ளதாக குவால்கம் நிறுவனம் அறிவித்துள்ளது. அடுத்த வருடம் ஸ்மார்ட் போன்கள் மட்டுமின்றி விண்டோஸ் 10 பயன்படுத்தும் மடிக்கணினிகளிலும் இந்த ப்ராசெஸ்சர் வழங்கப்படும் என்றும், இந்த வார இறுதியில் ஸ்னேப்டிராகன் 845 குறித்த முழு விவரங்களும் வெளியிடப்படும் என்றும் குவால்கம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் சமீபத்தில் சியோமி நிறுவனம் வெளியிட்ட தகவலில் Mi 7 என்ற புதிய மாடலில் ஸ்னேப்டிராகன் 845 பயன்படுத்தப்பட்டுள்ளது தெளிவாகிறது.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon