மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 2 ஜூலை 2020

ஜியோவைத் தொடர்ந்து ஏர்டெல் சலுகை!

ஜியோவைத் தொடர்ந்து ஏர்டெல் சலுகை!

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்புச் சேவை நிறுவனமான ஏர்டெல், தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடிச் சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. அந்த வரிசையில் ஏர்டெல் 4ஜி ஹாட்-ஸ்பாட் கருவி மற்றும் ஏர்டெல் 4ஜி டாங்கள் ஆகியவற்றின் விலையில் 50 சதவிகிதம் தள்ளுபடி அறிவித்துள்ளது. இதன்படி ரூ.1950க்கு விற்பனையான 4ஜி ஹாட்-ஸ்பாட் மற்றும் ஏர்டெல் 4ஜி டாங்கள் தற்போது ரூ.999க்கு விற்பனையாகிறது. இந்தச் சலுகையை பயன்படுத்தும் முன் ஏர்டெல் நிறுவனம் சில நிபந்தனைகளை முன்வைக்கிறது.

இந்தச் சலுகை ஏர்டெல்லின் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதைப் பயன்படுத்தும் முன் ரூ.501 முன் கட்டணம் செலுத்த வேண்டும். இது அவர்களின் முதல் மற்றும் இரண்டாவது பில் கட்டணத்தில் வரும் தொகையுடன் கழிந்துவிடும். இந்தக் கட்டுப்பாடுகள் ஏர்டெல் 4ஜி டாங்கள் கருவிக்குப் பொருந்தாது.

ஏர்டெல் 4ஜி ஹாட்-ஸ்பாட் கருவியின் வாயிலாக ஒரே சமயத்தில் பத்து கருவிகளைக் கநெக்ட் செய்து கொள்ளலாம். ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால் 6 மணி நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். இதில் 2ஜி மற்றும் 3ஜி இணைப்பு வசதியும் உள்ளது. முன்னதாக செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஜியோ 4ஜி ஹாட்-ஸ்பாட் கருவியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 50 சதவிகிதம் சலுகை அளித்ததைத் தொடர்ந்து தற்போது ஏர்டெல் நிறுவனம் இந்த அதிரடிச் சலுகையை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon