மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 2 ஜூலை 2020

மல்லி - சீரகம் விலை உயர்வு!

மல்லி - சீரகம் விலை உயர்வு!

விநியோகக் குறைபாடு காரணமாக இந்தியத் தலைநகர் டெல்லியில் மல்லி மற்றும் சீரகத்தின் விலை குவிண்டாலுக்கு ரூ.100 வரை அதிகரித்துள்ளது.

சந்தையில் தேவை அதிகரிப்பு மற்றும் விநியோக சங்கிலியில் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக டெல்லியில் உள்ள மொத்த விற்பனைச் சந்தையில், மல்லி மற்றும் சீரகத்தின் விலை கணிசமான ஏற்றத்தைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக மல்லி விலை குவிண்டாலுக்கு 100 ரூபாய் அதிகரித்து, ரூ.5,900 முதல் ரூ.12,500 வரை விற்பனையாகிறது. அதைத் தொடர்ந்து ஒரு குவிண்டால் சாதா சீரகம் ரூ.20,300 முதல் ரூ.20,600 வரையிலும், தரமான சீரகம் ரூ.22,800 முதல் ரூ.23,300 வரையிலும் விற்பனையானது. விற்பனையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கிடையே ஏற்பட்ட விநியோகத் தட்டுப்பாட்டின் காரணமாக இந்த விலையேற்றம் அரங்கேறியிருப்பதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

டிசம்பர் 5ஆம் தேதி நிலவரப்படி பொருட்களின் விலைப் பட்டியல்:

பெருஞ்சீரகம் ஒரு கிலோ ரூ.110 முதல் ரூ.160, கருப்பு மிளகு ரூ.410 முதல் ரூ.580, கிராம்பு ரூ.510 முதல் ரூ.520, இலவங்கப்பட்டை ரூ.150 முதல் ரூ.160, மல்லி ஒரு குவிண்டால் ரூ.5,900 முதல் ரூ.12,500, உலர்ந்த இஞ்சி ஒரு குவிண்டால் ரூ.12,500 முதல் ரூ.17,000, கசகசா ஒரு கிலோ ரூ.490 முதல் ரூ.510, புளி ஒரு குவிண்டால் ரூ.7,000 முதல் ரூ.8,500, தேயிலை ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.290 என்றளவில் விற்பனை செய்யப்படுகிறது.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon