மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

பட்ஜெட்: வேளாண் துறையுடன் ஜேட்லி சந்திப்பு!

பட்ஜெட்: வேளாண் துறையுடன் ஜேட்லி சந்திப்பு!

2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட் முன்னேற்பாட்டு நடவடிக்கையாக வேளாண் துறையுடன் முதற்கட்டக் கூட்டத்தை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நடத்திக் கலந்துரையாடியுள்ளார்.

2018-19 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் அருண் ஜெட்லியால் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்பாக பட்ஜெட் அறிக்கைக்கான முன்மாதிரி குறித்த கலந்தாலோசனைகளை அருண் ஜேட்லி தொடங்கியுள்ளார். அதன் முதற்கட்டமாக டிசம்பர் 5ஆம் தேதி அவர் மத்திய வேளாண் அமைச்சகத்துடன் கலந்துரையாடும் கூட்டம் ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “வருகிற 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் இலக்கை அடையும் பொருட்டு, அவர்களின் விளைபொருட்களைச் சேமித்து வைப்பதற்கான வசதி மற்றும் சந்தைப்படுத்துதல் வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டியது அவசியமாகிறது. அப்போதுதான் அவர்களுக்கு உரிய விலை கிடைக்கும். இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நியாய விலை உடனடியாக அவர்களுக்குக் கிடைக்க வழிவகை செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கான கொள்கைகள் அவர்களுக்கு மிகவும் எளிதான ஒன்றாக மாற்றியமைக்கப்படும் என்று அருண் ஜேட்லி கூறினார். வேளாண் துறை நிபுணர்களின் கருத்துப்படி, நாட்டின் மொத்த வேலைவாய்ப்பில் சுமார் 48.9 சதவிகிதப் பங்குகளைக் கொண்டுள்ள விவசாயத் துறையில் விவசாயிகளுக்கான வருமானம் பாதுகாக்கப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும் என்பதாகும். அவர்களின் வருவாயை இரட்டிப்பாக்கவும், நிலையான வருவாய் கிடைக்கவும் இந்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon