மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

மீனவர்கள் மாயம்: முதல்வர் ஆலோசனை!

மீனவர்கள் மாயம்: முதல்வர் ஆலோசனை!

ஒகி புயலால் மாயமான மீனவர்களின் மீட்பு குறித்து முப்படை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிசம்பர் 06) ஆலோசனை நடத்திவருகிறார்.

புயல் நேரத்தில் கடலில் மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவர்கள் இதுவரை முழுமையாக மீட்கப்படவில்லை. காணாமல் போன மீனவர்கள் எப்போது வீடு திரும்புவார்கள் என உறவினர்கள் பயத்துடன் காத்திருக்க, மீனவர்களைத் தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதனிடையே புயல் நேரத்தில் கடலில் மாயமான 2,864 மீனவர்களில் 2,604 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மீனவர்கள் மீட்பு குறித்து முப்படைகளின் தென்பிராந்திய தளபதிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று காலை முதல் ஆலோசனை நடத்திவருகிறார்.தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் கலந்து கொண்டுள்ளார். கூட்டத்தில் காணாமல் போன மீனவர்கள், மீட்கப்பட்ட மீனவர்களின் நிலை குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில், கேரளாவில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்குத் தலா 20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon