மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 6 டிச 2017

இசையமைப்பாளர் ஆதித்யன் மறைவு!

இசையமைப்பாளர் ஆதித்யன் மறைவு!

திரைப்பட இசையமைப்பாளர் ஆதித்யன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு (டிசம்பர் 5) ஐதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 63.

1954ம் ஆண்டு தஞ்சையில் பிறந்தவர் ஆதித்யன். அமரன், சீவலப்பேரி பாண்டி, மாமன் மகள், லக்கி மேன், கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட தமிழ்த்திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். டி.இமான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களுக்கு குருவாகவும் இருந்துள்ளார். இசையமைப்பதை நிறுத்திய ஆதித்யன் தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுவந்தார்.

சிறுநீரக பிரச்னை காரணமாக அவதிப்பட்டு வந்த ஆதித்யன் ஹைதராபாத்தில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு சென்ற போது அங்கேயே காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். இறுதிச் சடங்கு நாளை (டிசம்பர் 7) சென்னையில் நடைபெற உள்ளது.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon