மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 13 ஆக 2020

ஆப்ரிக்காவுடன் மேம்படும் இந்திய வர்த்தகம்!

ஆப்ரிக்காவுடன் மேம்படும் இந்திய வர்த்தகம்!

இந்தியா மற்றும் ஆப்ரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு வர்த்தக மதிப்பானது அடுத்த இரண்டு ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர்களைத் தாண்டும் என்று மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நேக்வி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாராளுமன்ற விவகாரங்கள் துறை மத்திய இணையமைச்சரான முக்தார் அப்பாஸ், தேசிய மென்பொருள் சேவைகள் கூட்டமைப்பான நாஸ்காம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில், “சுரங்கம் & தாது, தொலைத் தொடர்பு, கட்டுமானம், வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவின் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆப்ரிக்கா பல்வேறு தொழில் வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் தொழில் தொடங்கும் வாய்ப்புகள் சிறப்பாக இருப்பதால் ஆப்ரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை இந்தியா வெகுவாக ஈர்க்கிறது.

இதற்காக இந்தியா பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை செவ்வனே மேற்கொண்டு வருகிறது. சர்வதேச மதிப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் கூட இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான அம்சங்களை வெகுவாகப் பாராட்டியுள்ளனர். இங்கு முதலீட்டு அம்சங்கள் பாதுகாப்பானதாகவும் எளிதாகவும் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்” என்று கூறினார். 2015-16 நிதியாண்டில் 57 பில்லியன் டாலர்களாக (ரூ.3,67,051.50 கோடி) உள்ள இந்திய - ஆப்ரிக்க இருதரப்பு வர்த்தக மதிப்பு அடுத்த இரண்டு ஆண்டுகளில் 100 பில்லியன் டாலராக (ரூ.6,43,850 கோடி) உயரும் என்றும் அவர் தெரிவித்தார்.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon