மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 29 ஜன 2020

பிரிட்டன் பிரதமரை கொல்ல முயற்சி!

பிரிட்டன் பிரதமரை கொல்ல முயற்சி!

பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவை கொல்லத் தீட்டப்பட்ட சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் பிரதமர் தெரெசா மே, லண்டன் நகரில் உள்ள டவுனிங் ஸ்ட்ரீட் இல்லத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், இந்தத் தெருவில் வெடிகுண்டை வெடிக்கச் செய்து தெரேசா மேவை கொல்ல சதித் தீட்டம் தீட்டியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்கார்ட்லாந்து யார்ட், மிட்லாண்ட் போலீஸ் மற்றும் எம்ஐ5 பிரிவு ஆகியோர் நடத்திய கூட்டுப் பரிசோதனை மூலம் இந்தத் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக, பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ், லண்டனின் வடக்கு பகுதியில் ஜகாரியா ரஹ்மான்(20) என்பவரும், தென் கிழக்கு பிர்மிஹ்ஹாம் பகுதியைச் சேர்ந்த அகிப் இம்ரான்(21) ஆகியோர் கடந்த நவ.,28 ல் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்று (டிசம்பர் 6 ) வெஸ்ட்மின்ஸ்டர் மாஜீஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். பிரிட்டனில் கடந்த மார்ச் மாதம் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின் முறியடிக்கப்படும் 9வது சதித்திட்டம் இதுவாகும்.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon