மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 6 டிச 2017

கூகுள் வெளியிட்ட ஓரியோ கோ!

கூகுள் வெளியிட்ட ஓரியோ கோ!

ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு அவ்வப்போது புதிய வெர்ஷன்களை வெளியிட்டுவரும் கூகுள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஓரியோ வெர்ஷன் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

பழைய வெர்ஷனிலிருந்து பல கிராபிக்ஸ் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இந்தப் புதிய வெர்ஷன் வெளியாகியுள்ளது. அதனால் பெரும்பாலும் அதிக RAM வசதி கொண்ட பயனர்கள் மட்டுமே இந்த புதிய ஓரியோ வெர்ஷனைப் பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் குறைந்த RAM வசதி மற்றும் குறைந்த கிராபிக்ஸ் வசதிகள் கொண்ட மாடல்களில் இந்த ஓரியோ வெர்ஷனைப் பயன்படுத்த கூகுள் நிறுவனம் ஓரியோ கோ என்ற வெர்ஷனைத் தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய வெர்ஷனில் யூடியூப் கோ, கூகுள் மேப், கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் இமெயில் எனக் குறைந்த அளவுள்ள அப்ளிகேஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

512MB RAM வசதி கொண்ட மாடல்களிலும் செயல்படும் வகையில் இந்த ஓரியோ கோ வெளியாகி உள்ளது. இதற்கு முன்னர் வெளியான ஓரியோ வெர்ஷனைச் சேமிக்க ஸ்டோரேஜ் வசதி தேவை. ஆனால் இந்தப் புதிய வெர்ஷன் குறைந்த ஸ்டோரேஜ் வசதியிலும் செயல்படும் வகையில் வெளியாகியுள்ளது. இதேபோல் கூகுள் நிறுவனம் அதன் பழைய வெர்ஷன்களை மாற்றம் செய்து வெளியிட உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. முந்தைய வெர்ஷனை விட 30 சதவிகிதம் வேகமாக செயல்படும் வகையில் ஓரியோ கோ வெளியாகியுள்ளது.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon