மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 6 டிச 2017

ஊட்டி ரயில் சேவை தொடக்கம்!

ஊட்டி ரயில் சேவை தொடக்கம்!

கடந்த நான்கு நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த ஊட்டி மலைப் பாதை ரயில் சேவை இன்று (டிசம்பர் 6) தொடங்கியது.

ஊட்டியில் பெய்த கனமழை காரணமாக ரயில் பாதையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் பாறாங்கற்கள் உருண்டு தண்டவாளத்தில் விழுந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் ஊட்டி மலை ரயில் சேவை டிசம்பர் 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, 30க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வழக்கமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை, 7.10 மணிக்குப் புறப்படும் மலைப் பாதை ரயில் மதியம் 12.00 மணிக்கு ஊட்டி சென்றடையும். அதேபோல், மதியம் 2மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்படும் இந்த ரயில், மேட்டுப்பாளையத்துக்கு மாலை 5.30 மணிக்கு சென்றடையும். அதன்படி, இன்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரயில் புறப்பட்டு சென்றது.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon