மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 20 ஜன 2020

தொடங்கும் திராட்சை அறுவடை!

தொடங்கும் திராட்சை அறுவடை!

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த நாசிக் பகுதியில் ஜனவரி முதல் வாரத்திலிருந்து திராட்சை அறுவடை தொடங்கவுள்ளது.

தாம்சன் சீட்லெஸ் மற்றும் கருப்பு சீட்லெஸ் ஆகிய இரண்டு வகைகளைப் பற்றி 10 முதல் 12 வார கால அளவில் கூட்டம் நடத்தப்பட்டு விவாதிக்கப்படவுள்ளதென்று மான்சூன் புட்ஸ் நிறுவனத்தின் விற்பனை அதிகாரியான பிரவின் சாந்தன் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்தாண்டு பிப்ரவரி முதல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி தொடங்கும் என்றும் திராட்சை சீசன் அடுத்தாண்டு மே மாதம் வரையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "இந்தச் சந்தை சிறிதானது. ஃபேர் ட்ரேட் வகை திராட்சையினால் குறைந்த அளவு பயிரிட்டவர்களுக்கும் நல்ல விலை கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இது சமூக ரீதியாக விவசாயத்தை மேம்படுத்த உதவுகிறது. சமீபத்தில் பெய்த மழையின் காரணமாகப் பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் தேவைக் குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு அதிக விநியோகம் காரணமாக இந்திய திராட்சைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற தட்டுப்பாடுகளைக் குறைக்க 10 சதவிகிதம் திராட்சைகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படும். மீதமுள்ள திராட்சைகள் உள்நாட்டுத் தேவைக்காக விற்பனை செய்யப்படும்" என்று கூறியுள்ளார்.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon