மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 13 ஆக 2020

மலைக்கிராம குழந்தைகளுக்கு இதயப் பரிசோதனை முகாம்!

மலைக்கிராம குழந்தைகளுக்கு இதயப் பரிசோதனை முகாம்!

கோவை, ஆனைகட்டி மலைக்கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கு இதயப் பரிசோதனை செய்யப்பட்டது.

கோவை, ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் சாய்சிட்டி இணைந்து, குழந்தைகளுக்கு நேற்று (டிசம்பர் 5) இதயப் பரிசோதனை முகாம் நடத்தினார்கள். இம்முகாம் கொண்டனூரில் உள்ள பள்ளியில் நடைபெற்றது. இதில் ஜம்புகண்டி, பனப்பள்ளி, கொண்டனூர், கண்டிவழி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குப் இதயப் பரிசோதனை நடைபெற்றது.

3 மாதக் குழந்தை முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவர்கள் வரை 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் இதில் கலந்துகொண்டனர். இதில், 30க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இதயக் குறைபாடு இருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு முதல் கட்டமாக, கொண்டனூர் பள்ளியிலேயே மருத்துவச் சோதனை செய்யப்பட்டது. அடுத்த கட்டமாக, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

மருத்துவர்கள் ஶ்ரீமதி, தேவ் பிரசாத், ஷோபி ஆனந்த் ஆகியோர் குழந்தைகளுக்குப் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இந்த முகாமில், ரோட்டரி கிளப்பின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். இணைந்த கரங்கள் அமைப்பினர் முகாமை ஒருங்கிணைத்தனர்.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon