மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

நிலக்கரி உற்பத்தியை உயர்த்தக் கோரிக்கை!

நிலக்கரி உற்பத்தியை உயர்த்தக் கோரிக்கை!

கோல் இந்தியா நிறுவன ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதால் ஏற்படும் இழப்பீட்டை ஈடுகட்டுவதற்கு நிலக்கரி உற்பத்தியை அந்நிறுவனம் அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

பொதுத்துறை சுரங்க நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் (CIL), நிலக்கரி உற்பத்தியில் சர்வதேச அளவில் மிகப்பெரிய நிறுவனமாக உள்ளதோடு, இந்தியாவின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் சுமார் 80 சதவிகிதப் பங்களிப்பைக் கொண்டுள்ளது. இந்த நிலையில் கோல் இந்தியா நிறுவனம் அதன் ஊழியர் யூனியன் அமைப்புடன் மேற்கொண்ட ஒப்பந்தம் ஒன்றில் இன்னும் ஐந்தாண்டுகளுக்கு அதன் ஊழியர்களின் ஊதியம் 20 சதவிகிதம் உயர்த்தப்படும் என்று சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனால் அந்நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.5,677 கோடி இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இழப்பீட்டைச் சரிசெய்யும் வகையில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

2017-18 நிதியாண்டில் கோல் இந்தியா நிறுவனம் முந்தைய ஆண்டைவிட 8.3 சதவிகிதம் கூடுதலாக, 600 மில்லியன் டன் அளவிலான நிலக்கரியை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. அதேபோல, 2018-19 நிதியாண்டில் 28.95 சதவிகித உயர்வுடன் 773.70 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்திடவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் ஊதிய உயர்வுச் செலவை ஈடுகட்டலாம் எனவும், நிலக்கரி விலையை உயர்த்துவதில் அரசு தலையிடாது எனவும் நிலக்கரித் துறை செயலாளரான சுசீல் குமார் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon