மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

தினம் ஒரு சிந்தனை: சக்தி!

தினம் ஒரு சிந்தனை: சக்தி!

உலகம் முழுவதும் அமைதியாக இருக்கும்போது, ஒரு குரல்கூட சக்தி வாய்ந்ததாகிறது.

- மலாலா யூசுப்சாய் (12 ஜூலை 1997). பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் கல்வி ஆர்வலர். பெண்கள் உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளுக்காக அறியப்படுகிறார். மலாலாவை அக்டோபர் 9, 2012 அன்று தாலிபான் சுட்டுக்கொல்ல முயன்றது. இவர் படுகாயம் அடைந்ததைத் தொடர்ந்து இதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தனக்குக் கிடைத்த உலகளாவிய ஆதரவுடன் தனது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்தார். 2013ஆம் ஆண்டு ஜூலை 12இல் மலாலா தனது 16ஆவது பிறந்த நாள் அன்று ஐக்கிய நாடுகள் சபையைத் தொடர்புகொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வை ஐக்கிய நாடுகள் ‘மலாலா தினம்’ என்று குறிப்பிட்டன. 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். சிறுவயதில் அமைதி நோபல் பரிசு பெற்றவர் இவரே. ‘நான் மலாலா’ என்ற பெயரில் இவரது வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளியிடப்பட்டது. உலக அமைதி மற்றும் செழிப்பு அறக்கட்டளையின், ‘தைரியத்துக்கான விருது’ம் பெற்றுள்ளார்.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon