மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

இளம் இயக்குநருடன் சூர்யா

இளம் இயக்குநருடன் சூர்யா

சூர்யாவின் 37ஆவது திரைப்படத்தை மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தனது முதல் படைப்பான மாநகரம் படத்தில் அழுத்தமான திரைக்கதை அமைத்து இளம் இயக்குநர்கள் வரிசையில் இடம்பிடித்தார் அறிமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அந்தப் படத்தில் சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா, சார்லி, ராம்தாஸ், மதுசூதனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்த அந்தப் படம் ரசிகர்களிடையேயும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனையடுத்து கார்த்தியை வைத்து படம் இயக்குவதாக தகவல் வெளிவந்தது. தற்போது சூர்யாவுடன் லோகேஷ் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாநகரம் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தையும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கவுள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஹீரோவாக சூர்யா நடிக்கவுள்ளதாக பிஹைண்ட் வுட்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்னேஷ் சிவனின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை அடுத்து செல்வராகன் இயக்கத்தில் 36ஆவது படமாக உருவாக இருக்கும் மற்றொரு படத்திலும் சூர்யா ஒப்பந்தமாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon