மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 29 ஜன 2020

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

சவுதி அரேபியாவில் ஓர் இடத்தில் கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது.

*

அந்தக் கடை வாசலில் கடையின் விதிமுறைகளின் பலகை இருந்தது. அதில் எழுதியிருந்தது.

*

1. கடைக்கு ஒரு தடவைதான் வரலாம்.

*

2. கடையில் மொத்தம் ஆறு தளங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தளத்திலும் இருக்கிற ஆண்களோட தகுதிகள் மேலே போகப்போக அதிகமாகிக் கொண்டே போகும்.

*

3. ஒரு தளத்தில் இருந்து மேலே சென்று விட்டால் மறுபடியும் கீழே வர முடியாது. அப்படியே வெளியே தான் போக வேண்டும்.

*

இதுதான் அந்த விதிமுறைகள்.

*

*

இதையெல்லாம் படித்து பார்த்துவிட்டு, ஓர் இளம்பெண் கணவர் வாங்க கடைக்கு வந்தார்.

*

கணவர் வாங்குவது என்பது காய்கறி வாங்குவது போன்ற காரியமல்லவே என்று நினைத்துக்கொண்டு கடையின் உள்ளே நுழைந்தார்.

*

முதல் தளம் அறிக்கை பலகையில்,

*

>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<

*

வேலை உள்ளவர்கள்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்.

*

இது என்ன ஒரு அடிப்படை தகுதி என்று எண்ணிக்கொண்டு மேலே செல்கிறார்.

*

*

இரண்டாம் தளம் அறிக்கை பலகையில்,

*

>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<

*

வேலை உள்ளவர்கள்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்.

மேலும்

குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்.

*

இதுவும் என்ன ஓர் அடிப்படை தகுதி என்று எண்ணிக்கொண்டு மேலே செல்கிறார்.

*

*

மூன்றாம் தளம் அறிக்கை பலகையில்.

*

>>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<<

*

வேலை உள்ளவர்கள்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்.

குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்.

மற்றும்

வசீகரமானவர்கள்.

*

அந்த இளம்பெண் ‘வசீகரமானவர்கள்’ என்பதை பார்த்ததும், “ஆஹா.. மூன்றாவது தளத்திலேயே இவ்வளவு தகுதிகள் இருந்தால், மேலே போகப்போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ” என்று நினைத்துக்கொண்டு மேலே செல்ல முடிவெடுத்தார்.

*

*

நாலாவது தளம் அறிக்கை பலகையில்,

*

>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<

*

வேலை உள்ளவர்கள்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்.

குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்.

வசீகரமானவர்கள்.

மற்றும்

வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உள்ளவர்கள்.

*

இதை விட வேறு என்ன வேண்டும்.. நல்ல குடும்பம் அமைக்கலாமே...?

*

கடவுளே... மேல என்ன இருக்கு என்று தெரிந்தே ஆகணும்.

அப்படி என்று முடிவு செய்து விட்டு, அடுத்த தளத்திற்கு சென்றார்...

*

*

ஐந்தாவது தளம் அறிக்கை பலகையில்,

*

>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<

*

வேலை உள்ளவர்கள்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்.

குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்.

வசீகரமானவர்கள்.

வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உள்ளவர்கள்

மற்றும்

மிகவும் ‘ரொமாண்டிக்’ ஆனவர்கள்.

*

*

அவ்வளவு தான்.. அந்த பெண்ணால் தாங்க முடியவில்லை..

*

சரி இங்கேயே யாரையாவது தேர்வு செய்யலாம் என்று நினைத்தாலும் இன்னொரு தளம் பாக்கி இருக்கின்றதே..

அங்கே என்ன எப்படிப்பட்ட கணவர்கள் இருப்பார்கள் என்பதை பார்க்காமல் எப்படி முடிவு செய்வது....???

*

சரி மேலே சென்று பார்த்து விடலாமே என்று முடிவு செய்து விட்டு ஆறாவது தளத்துக்குச் செல்கிறார்....

*

*

*

*

*😎

*

*

*

*

*

*

*

ஆறாவது தளம் அறிக்கை பலகையில்,

*

இந்த தளத்தில் கணவர்கள் யாரும் இல்லை. வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது. இந்த தளத்தை அமைத்ததற்குக் காரணம், பெண்களை திருப்திப்படுத்தவே முடியாது என்பதை நிரூபிக்கத்தான்...

*

எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி!

*

கீழே படிகளில் இறங்கவும்.

என்று எழுதியிருந்தது.

இந்த மெசேஜை உருவாக்கியவன் எவ்வளவு அடிவாங்கியிருப்பான் வாழ்க்கையில்.

ஆனா, இதை ஃபார்வேர்டு செய்யும் அதிபுத்திசாலிகள்.

எனது நண்பரில் ஒருவர் திருமணமானவர். இந்த மெசேஜை தன்னுடைய மனைவிக்கே ஃபார்வேர்டு செய்தார். ஆஹா... எத்தனை தைரியமானவர் என நானும் உங்களைப்போல் வியந்துதான் போனேன். பிறகுதான் தெரிந்தது அவர் வெளியூரில் உள்ளார். வேலை முடித்து திரும்ப ஆறு மாதங்கள் ஆகும் என்று. ஆனால், பெண்களின் நினைவுத்திறன் பற்றி அவருக்கு இன்னும் சரியாகத் தெரியவில்லை போலும்.

சித்தி சீரியலிலோ, கங்கா யமுனா சரஸ்வதி சீரியலிலோ டிசம்பர் மாதம் ஆறாம் தேதி என்ன கலர் புடவை கட்டியிருந்தார்கள் என கேட்டாலும் எத்தனை வருட டேட்டா பேஸ்களையும் எடுத்து கனக்கச்சிதமாக சொல்லக்கூடியவர்கள். நீ ஊருக்கு வாடி மாப்ள உனக்கு இருக்கு.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon