மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 24 ஜன 2021

வைரலாகும் விஜய் சேதுபதி ஸ்டில்!

வைரலாகும் விஜய் சேதுபதி ஸ்டில்!வெற்றிநடை போடும் தமிழகம்

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதியின் புதிய படத்தை ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கி வருகிறார். சூப்பர் டீலக்ஸ் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஃபகத் பாசில், சமந்தா, காயத்ரி, நதியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். முதலில் இந்தப் படத்துக்கு ‘அநீதி கதைகள்’ என்று பெயரிடப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் அந்தத் தலைப்பை மாற்றி ‘சூப்பர் டீலக்ஸ்’ என அறிவித்தார்கள்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி பெண் வேடத்தில் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகின. பெண் வேடத்தில் இருக்கும் விஜய் சேதுபதியின் புகைப்படத்தை படக்குழுவினரே வெளியிட்டு இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தின் பெயர் ஷில்பா என்றும் தெரிவித்தனர். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுக்கிறார். பி.எஸ்.வினோத், நிரவ் ஷா ஒளிப்பதிவாளர்களாகப் பணியாற்றுகின்றனர்.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon