மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 6 டிச 2017

எகிறிய மார்க்கெட்: எஸ்கேப் அமலா பால்

எகிறிய மார்க்கெட்: எஸ்கேப் அமலா பால்

அமலா பால் மலையாளத்தில் நிவின்பாலிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்த படத்திலிருந்து விலகியுள்ளார்.

மலையாளத்தில் வெளியான ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ திரைப்படம் தமிழில் ஜோதிகா நடிப்பில் 36 வயதினிலே என்ற பெயரில் ரீ மேக்காகி வெற்றி பெற்றது. இந்தப் படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் தற்போது நிவின்பாலியை வைத்து மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளில் இயக்கிவரும் படம் ‘காயம்குளம் கொச்சுண்ணி’.

1980களில் கேரளாவில் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவரின் கதையை அடிப்படையாகக் கொண்டது. நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிக்கும் முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தில் அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். படத்தில் அவரது கதாபாத்திரத்தின் அவுட்லைன் ஸ்கெட்ச் சமீபத்தில் படக்குழுவால் வெளியிடப்பட்டது.

தற்போது இந்தப் படத்திலிருந்து அமலா பால் விலகியுள்ளதாகவும் அவருக்குப் பதிலாக ப்ரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் பிஹைண்ட் வுட்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலா பால் நடிப்பில் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் திருட்டுப் பயலே 2 திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon