மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 29 ஜன 2020

மாரத்தான் வீரர்களுக்காக ஓர் அப்ளிகேஷன்!

மாரத்தான் வீரர்களுக்காக ஓர் அப்ளிகேஷன்!

மாரத்தான் ஓட்டப்பந்தயங்கள் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகின்றன. சில இடங்களில் நடைபெறும் குறுகிய அளவிலான மாரத்தான் போட்டிகள் ஏதேனும் ஒரு விளம்பரத்துக்காகவோ அல்லது விழிப்புணர்வுக்காகவோ நடத்தப்படும். அதேபோல் உலகளவிலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு இடையே மாரத்தான் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.

அவ்வாறு மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ளும் வீரர் உடலளவில் வலிமையான நபராக இருந்தால் மட்டும் வெற்றிபெற்றுவிட முடியாது. மனதளவிலும் அவர் தயாராக வேண்டும். எந்த ஒரு விளையாட்டிலும் ரசிகர்களின் ஊக்கம் தனி ஓர் உத்வேகத்தை வீரர்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்பதே உண்மை. அதன்படி மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ளும் வீரர்களை உற்சாகப்படுத்த Cheer My Friend என்ற புதிய அப்ளிகேஷன் ஒன்றினை Disrupt Berlin என்ற நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்த அப்ளிகேஷனை மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ளும் நபர் அவரது ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்துகொள்ள வேண்டும். மாரத்தானின் கலந்துகொள்ளும் வீரர்களின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு அவரது லிங்க்கினை அவர் மெசேஜ் மூலம் அனுப்ப இயலும். இந்த லிங்க்கைப் பயன்படுத்தி அவர்கள் அந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்யாமல் தங்களின் வாய்ஸ் மெசேஜ்களை அந்த வீரரின் ஸ்மார்ட்போனுக்கு அனுப்ப இயலும். மாரத்தானில் கலந்துகொண்டுள்ள நபர் அவர்களது வாய்ஸ்களை ஹெட்போன்கள் மூலம் கேட்டுக்கொள்ளலாம். இதில் அந்த வீரரின் லிங்க்கை பயன்படுத்தி பலரும் அவருக்கு வாய்ஸ் மெசேஜ்களை அனுப்பி வீரரை உற்சாகப்படுத்தலாம்.

இந்த புதிய அப்ளிகேஷன் மாரத்தான் வீரர்களுக்காக கண்டறியப்பட்டது என Disrupt Berlin நிறுவனம் தெரிவித்தாலும், இந்தப் புதுமையான வசதி பல்வேறு இடங்களில் பிறகு பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon