மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

கிச்சன் கீர்த்தனா - சுவையான அப்பளக் குழம்பு செய்வது எப்படி?

கிச்சன் கீர்த்தனா - சுவையான  அப்பளக் குழம்பு செய்வது எப்படி?

குழம்பு செய்ய காய்கறிகள் இல்லாதபோது பெரும்பாலும் முடிவெடுப்பது ரசத்தை நோக்கிதான். ஆனால், ஏதோ வறுமையில் வாடுவதைப் போன்று நினைத்து மிகுந்த கவலையுடனே ரசத்தைச் சாப்பிடும் நிலை வந்துவிட்டது. சரி, வேறு என்னவிதமான மாற்று செய்யலாம் என்றால் இந்த திடீர் அப்பளக் குழம்பை செய்து அசத்தலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

புளி – நெல்லிக்காய் அளவு, அப்பளம் – 5, கடுகு – ஒரு டீஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், மிளகாய் தூள் – அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 10, தக்காளி – 1, எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

* தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* அப்பளத்தைத் துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

* புளியை நன்றாக கரைத்துக்கொள்ளவும்.

* ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதங்கிய பின்னர் தக்காளியைப் போட்டு வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் சாம்பார் பொடி, மிளகாய்தூள் சேர்த்து வதக்கிய பின் புளிக் கரைசலை ஊற்றி நன்றாகக் கொதிக்க விடவும்.

* நன்றாக கொதிக்கும்போது தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

* மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு தாளித்த பின் வெட்டி வைத்துள்ள அப்பளத்தைப் போட்டு சிறிது வதக்கி கொதித்து கொண்டிருக்கும் குழம்பில் சேர்த்து ஐந்து நிமிடங்கள் அடுப்பை மிதமான தீயில் வைத்து இறக்கவும்.

* சுவையான அப்பளக் குழம்பு ரெடி.

காய்கறிகள் இல்லையென்றால்தான் இந்த அப்பளக்குழம்பை செய்ய வேண்டும் என்றில்லை. ஒரு மாறுதலுக்கு அவ்வப்போது செய்து அசத்தலாம்.

கீர்த்தனா சிந்தனைகள்:

சந்தோஷமா வாழ்றேன்னு காட்டிக்கத்தான் பணம் தேவையா இருக்கு. உண்மையில சந்தோஷமா வாழ பணம் ஒருபொருட்டே இல்ல.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon