மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 22 ஜன 2020

பியூட்டி ப்ரியா - முகப்பொலிவுக்குச் சில டிப்ஸ்!

பியூட்டி ப்ரியா - முகப்பொலிவுக்குச் சில டிப்ஸ்!

எவ்வளவுதான் முகத்தை திரையிட்டு மூடிச்சென்றாலும் போக்குவரத்தினால் ஏற்படும் மாசுக்களால் நம் முகம் மாறுதல் அடைவது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது.

எத்தனையோ க்ரீம்கள் உபயோகித்தாலும் வறட்சியே காணப்படுகிறது.

அவ்வப்போது சில மாஸ்க்குகளைப் பயன்படுத்திவர... என்றும் பொலிவு பெறும் முக அழகை தக்கவைத்துக் கொள்ளலாம்.

முகத்தில் உள்ள முகப்பரு, வறட்சி, கருமை, தழும்பு, சொரசொரப்பு சுருக்கம் என பல சரும பிரச்னைகளையும் வேப்பிலை - தயிர் மாஸ்க் போக்கிவிடும். வாரம் ஒரு முறையேனும் வேப்பிலையும் தயிரும் கலந்த மாஸ்க்கை பயன்படுத்தி வர நல்ல மாற்றங்களைக் காணலாம்.

சில புதிதான வேப்பிலையைப் பறித்து அதில் 2 டேபிள்ஸ்பூன் தயிர் கலந்து அரைத்துக்கொள்ளுங்கள். இந்தக் கலவையை முகம், கழுத்து மற்றும் கைகளுக்குத் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும்.

நீங்கள் எதிர்ப்பார்ப்பதை போல அருமையாகச் சருமம் பொலிவு பெறும். அழுக்குகள், வெயிலினால் உண்டாகும் கருமை காணாமல் போய்விடும்.

இயற்கையாகவே சூரிய ஒளிக்கதிர்களை தடுக்கும் ஆற்றல் வேப்பிலை மற்றும் தயிருக்கு உண்டு. ஆகவே, இவை புற ஊதாக்கதிர்களிடமிருந்து உங்களைப் பாதுகாக்கும்.

உங்களுக்கு கடினமான சொரசொரப்பான சருமமா? இது உங்களை ஆச்சர்யப்படும் வகையில் உங்கள் சருமத்தை மாற்றும். உண்மைதான். மிக மிருதுவாக இயற்கை போன்ற சருமம் தருகிறது. உபயோகித்துவிட்டு சொல்லுங்கள்.

அடுத்ததாக கனிந்த கொய்யாப்பழத்தை எடுத்துக்கொண்டு அதை நன்றாக மசித்து அவற்றில் எலுமிச்சைச் சாற்றினை விட்டு மாஸ்க் போன்று பயன்படுத்தி வர, நன்கு பொலிவும் கிடைக்கும். இதையே தலைக்கும் பயன்படுத்தலாம். கூந்தல் வளர்ச்சிக்கு நன்கு உதவும். மென்மையாகவும் இருக்கும். பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட நல்ல நிவாரணியும் கூட.

எலுமிச்சையைப் போலவே, உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே, உருளைக்கிழங்கை பேஸ்ட் செய்து, அதை தினமும் முகத்தில் தடவி, நன்கு ஊற வைத்து கழுவினால், முகம் பொலிவோடு மின்னும்.

துளசியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் இதர ஊட்டச்சத்துகள், சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமத்தை பொலிவோடும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளும். முக்கியமாக துளசி முகப்பரு பிரச்னைகளுக்கு நல்ல தீர்வளிக்கும். அதற்கு துளசியை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் 15-20 நிமிடங்கள் தடவி ஊறவைத்து கழுவ வேண்டும்.

நிலவின் முகத்திரையோ மேகம், உனக்கு முகத்திரையோ உன் வெட்கம் என சொல்லும் அளவுக்கு அழகாகிவிடுவீர்கள்.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon