மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 29 ஜன 2020

லஞ்ச வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?: உயர் நீதிமன்றம்!

லஞ்ச வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?: உயர் நீதிமன்றம்!

‘லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கூடாது?’ என தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தாத்தா சொத்தைப் பேரனுக்கு மாற்றுவதற்குச் சார்பதிவாளர் லஞ்சம் கேட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை நேற்று (டிசம்பர் 5) நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். அப்போது, லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கூடாது என்றும், ஊழியர்களை தண்டிக்கும் வகையில் ஏன் தனி தடுப்புச் சட்டம் கொண்டுவரக் கூடாது என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், ஊழலைத் தடுக்க லஞ்ச ஒழிப்பு துறையிடம் என்ன மாதிரியான தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. கடந்த பத்தாண்டுகளில் லஞ்ச வழக்கில் எத்தனை பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன உள்ளிட்ட 15 கேள்விகளை எழுப்பி, அரசு பதிலளிக்குமாறு இந்த வழக்கை 11ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.500 லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் அலுவலக உதவியாளருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon