மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 22 ஜன 2020

சிரியாவில் வெடிகுண்டு தாக்குதல்: எட்டு பேர் பலி!

சிரியாவில் வெடிகுண்டு தாக்குதல்: எட்டு பேர் பலி!

சிரியாவில் பேருந்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் எட்டு பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர்.

சிரியாவின் ஹோம்ஸ் மாகாணம் அக்ராமா மாவட்டத்தில் உள்ள அல்-பாத் பல்கலைக்கழகத்துக்கு அருகே பேருந்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுத் தாக்குதல் நடந்தது. அதில், எட்டு பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்தில் பயணம் செய்தவர்களில் பாதி பேர் மாணவர்கள் ஆவர்.

சிரியா நாட்டில் 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதனால், பல இடங்களில் இதுபோன்ற தாக்குதல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon