மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 20 பிப் 2020

மக்களை மயக்கும் உத்தி!

  மக்களை மயக்கும் உத்தி!

மக்களை மயக்கும் வித்தையை மனித நேயர் தனது தீராத உழைப்பின் மூலம் வசமாக்கியிருந்தார். அவர் சைதாப்பேட்டை சட்டமன்ற வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்ட போது நடந்த சில சம்பவங்கள் நெஞ்சை நெகிழ்த்தும் வல்லமை கொண்டவை. அதை மனித நேயரின் வார்த்தைகளிலேயே காணலாம்.

அன்றைக்கு வாக்காளர்களுக்கு தேர்தல் அடையாள அட்டை வழங்கப்படவில்லை. யார் வேண்டுமானாலும் வரிசையாக நின்று ஒரு பெயரை சொல்லி வாக்களிக்கலாம். அப்படித்தான் நடிகர் சிவாஜி கணேசன் அவர்களுடைய வாக்கையே வேறொருவர் பதிவு செய்த நிகழ்வுகள் எல்லாம் நடைபெற்றது. அப்படிப்பட்ட நிலையில் நான் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில், கள்ள ஓட்டுக்களால் வெற்றி வாய்ப்பினை இழந்தேன். நான் வெற்றி வாய்ப்பினை இழந்ததற்கு பிறகு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி அமைந்தது.

நான் வெற்றி வாய்ப்பினை இழந்தாலும், தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி தொடர்ந்தது. நான் தோல்வியை கண்டு துவண்டு விடாமல், மக்களுடைய பிரச்சனைகளை கையில் எடுத்து கொண்டு, ஒவ்வொரு அமைச்சர்களையும் அழைத்து வந்து ஒவ்வொரு பகுதியாக பார்வையிட வைப்பேன்.

சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, குடிசைப் பகுதி மேம்பாடு, குடிசைப் பகுதிகளில் அடிப்படை வசதிகள், அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கின்ற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், அடையாற்றில் பெருவெள்ளம் வந்தாலும் தடுக்க நடவடிக்கை எடுப்பதற்கான தொடர் நடவடிக்கை, மக்களுடைய அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைக்க வேண்டுமென்று ரேஷன் கடைகள் இவைகளை பற்றியெல்லாம் மிக வேகமாக காரியம் ஆற்றுகின்ற வகையில், ஒவ்வொரு வட்டத்திலேயும் அமைச்சர்களை அழைத்து வந்து பார்வையிட செய்து, சென்னை மாநகராட்சியில் ஆணையர் அவர்களின் தலைமையில், சைதாப்பேட்டை தொகுதியில் இருக்கின்ற வட்ட செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகளையெல்லாம் அழைத்து சென்று ஒவ்வொரு மாதமும் எங்களுடைய கட்சி நிர்வாகிகளுடன் ஆணையர் அவர்களின் தலைமையில் கூட்டம் நடத்தினேன்.

மாநகராட்சியினுடைய அனைத்து பிரிவு அலுவலர்களை சார்ந்தவர்களுடன் நான் ஒரு புறம், மற்றொரு புறம் ஆணையர் திருமதி சாந்தா ஷீலா நாயர் அவர்களும், அப்பொழுது இந்த சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள பிரச்சனைகளை எல்லாம் நாங்கள் முதலில் பதிவு செய்தோம். அடுத்த மாதம் கூட்டம் கூடுகின்ற பொழுது, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரத்தினை (action taken report) எங்களுக்கு தருவார்கள். இப்படியாக, 5 ஆண்டு காலம், மிகச் சரியாக இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, சைதாப்பேட்டையில் இருக்கின்ற அனைத்து பிரச்சனகளையும் தீர்க்க நடவடிக்கை எடுத்தேன்’’

அதாவது சைதாப்பேட்டையின் ஒரு சட்டமன்ற உறுப்பினர் போலவே அன்று செயல்பட்டிருக்கிறார் மனித நேயர்.

’ ஒரு கட்சியின் சார்பாக ஒரு வேட்பாளராக போட்டியிடுகின்ற வாய்ப்பும், அந்த வாய்ப்பில் வெற்றி அல்லது தோல்வி ஏற்படலாம்.

நான் ஆளுங்கட்சியினை சார்ந்தவன், அந்தத் தொகுதியினுடைய அமைப்பாளர் என்கிற அந்தத் தகுதியை வைத்து, அதனால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்கின்ற உணர்வு எனக்குள் இருந்தது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்கின்ற உணர்வு இருந்தால், எந்த நிலையிலும் சேவை செய்யலாம். நான் வெற்றி வாய்ப்பினை இழந்தாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பொறுப்பில் இருந்த காரணத்தினால், நான் சைதாப்பேட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவே என்னை நினைத்து கொண்டு, மக்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டுமென்று, பொது வாழ்க்கையில் ஒரு முன் மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டவன் நான்’’ என்கிறார் மனித நேயர்.

இப்படியாக ஐந்து வருடம் ஓடிப் போய் 1984 சட்டமன்றத் தேர்தல் வந்தது.... அப்போது என்ன நடந்தது?

கருத்துகளை தெரிவிக்க... [email protected]

வளரட்டும் மனித நேயம்

விளம்பர பகுதி

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon