மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

திருட்டுப் பயலே 2: விமர்சனங்களும், பதில்களும்...- சுசி கணேசன்!

திருட்டுப் பயலே 2: விமர்சனங்களும், பதில்களும்...- சுசி கணேசன்!

​திருட்டுப் பயலே 2 திரைப்படம் வெற்றிபெற்று, தெலுங்கு ரிலீஸுக்குத் தயாராகிக்கொண்டிருந்தாலும் அதைப்பற்றிய கேள்விகளும், விமர்சனங்களும், புதிய கருத்தாக்கங்களும் நீண்டுகொண்டே போகின்றன. திருட்டுப் பயலே 2 படத்தில் தனது கேரக்டர் பற்றி விளக்கிய பிரசன்னா ‘ஒரு திரைப்படத்தின் கதை என்பது, அது முடிந்தபிறகு தான் ரசிகர்களின் மனதிலிருந்து தொடங்கும் ’ என்று கூறினார். அதை நிரூபிக்கும் வகையில் திருட்டுப் பயலே 2 படத்தில் பார்த்த காட்சிகளில், எவற்றையெல்லாம் வாழ்வில் எதிர்கொண்டார்களோ, அங்கிருந்தெல்லாம் இந்தப்படத்துக்கு புதிய கதைகளை எழுதிக்கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். அதில் சில இடங்களில் முரண்படும்போது அதற்கான கேள்விகளை இயக்குனர் முன் வைக்கிறார்கள். அந்த கேள்விகளுக்கு இயக்குநர் சுசி கணேசனின் பதில் என்னவென்று இன்று பார்ப்போம்.

கேள்வி: இருவருமே கெட்டவர்கள்... தண்டனை ஒருவருக்கு மட்டுமா?

சுசி: ஒளித்துவைத்த பணமும் , கனவும் தொலைந்து போவதைத் தவிர வேறென்ன தண்டனை வேண்டும்? பால்கி செத்ததற்கு சமம் என்றால், செல்வமும் செத்ததற்கு சமம்தான்.

கேள்வி: தவறே செய்யாத அமலா பால் கணவனிடம் சொல்லத் தயங்குவது ஏன்?

சுசி: "எனக்கும் செல்வத்துக்கும் இடையில் நடந்த personal விசயத்தையெல்லாம் நிறைய பேசியிருக்கேன். அதெல்லாம் record பண்ணிவச்சிருக்கான்." கணவனுக்கும் மனைவிக்கும் personal என்றால்? அவ்வளவு ஆழமாக பேசி மாட்டிக்கொண்டிருக்கிறாள்.

கேள்வி: உயர் அதிகாரியை ஒட்டுக்கேட்கும் வேலையை இன்ஸ்பெக்டரிடம் கொடுப்பார்களா?

சுசி: உயர் அதிகாரிதான் செய்ய வேண்டும் .ஆனால், loyal ஆட்களைத் தான் top officer தேடுவார். Inspectorஆக இருந்தாலும்! Boring job. ஒரு மணி நேரம் ஒட்டுக் கேட்டால் தலை வலிக்கும். உயர் அதிகாரிகள் மேற்பார்வை மட்டுமே செய்வார்கள்.

கேள்வி: climax இங்கேயே முடித்திருக்கலாமே எதற்கு மலேசியா? (Thailand)

சுசி: வெளிநாட்டில் வாழப்போற கனவை மனைவிக்கு காட்டவேண்டும்... வட கொரியா அதிபர் ஆனாலும் பண்ணுகிற crime-ஐ மலேசியாவில் வைத்து பண்ணுகிறார் ஏன்? குற்றம் நடக்கிற இடத்தை வெளியில் வைப்பான் புத்திசாலி!

கேள்வி: துப்பறியும் போலீசார் ஏன் தனியார் துப்பறிவாளனை நாடணும் ?

சுசி: நாயகன் படத்தில் போலீஸ் அதிகாரி தன் மகளைக் காப்பாற்ற நாயக்கரை நாடிப் போனது போல. தன் கீழிருக்கும் policeஐ நம்பாமல் detectiveஐ நாடும் அதிகாரிகளை சந்தித்திருக்கிறேன்.

ஒரு திரைப்படம் ரிலீஸாவதற்கு முன்பு வெளியிடப்படும் டீசர் போல, மேலே சுசி கணேசன் பதில் சொல்லியிருக்கும் கேள்விகளும் சிறு சிறு டீசர்கள் தான். இவற்றுக்குப்பின்னால் இன்னொரு திரைப்படம் எடுக்கக்கூடிய அளவுக்கு உள்ளார்ந்த விவாதங்களும், கருத்துகளும் பொதிந்து கிடக்கின்றன. அவற்றை, அவரவர் விருப்பத்துக்கேற்ப, வாழும் சூழலுக்கேற்ப புரிந்துகொள்ளவும் வாழ்வில் பொருத்திக்கொள்வதற்குமான இடைவெளிகளை உருவாக்கிக்கொடுத்திருக்கிறார் இயக்குநர். திருட்டுப் பயலே டைட்டிலில் வெளியாகியிருக்கும் இரு திரைப்படங்களும், இந்த சமூகம் கேட்க மறந்த கேள்விகளுக்கான பதில். சமூகத்தில் இப்படம் உருவாக்கியிருக்கும் கேள்விகளே இதன் வெற்றி.

விளம்பர பகுதி

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon