மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 20 பிப் 2020

காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல்

காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தியை தவிர வேறு யாரும் போட்டியிடாததால் அவர் தலைவராக தேர்வாகவுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவராக உள்ள சோனியா காந்தியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டும், கட்சியின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டும் ராகுல் காந்தியை தலைவராக நியமிக்க வேண்டும் என அக்கட்சிக்குள் கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து கடந்த மாதம் கூடிய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய வேண்டிய காலக்கெடு நேற்றோடு முடிந்தது. வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் ராகுல் தலைவராவது உறுதியானது.

இந்நிலையில், காங்கிரஸ் தேர்தல் அதிகாரி ராமச்சந்திரன் இன்று (டிசம்பர் 5 ) வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ராகுல் காந்தியை முன்மொழிந்து 89 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை ஆய்வு செய்ததில் செல்லத்தக்கது என்று தெரியவந்துள்ளது. எனவே, காங்கிரஸ் தலைவர் பதவிக்கான ஒரே வேட்பாளராக ராகுல் மட்டுமே உள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ராகுல் தலைவராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon