மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 25 ஜன 2020

விஜய்-சன் பிக்சர்ஸ் கூட்டணி உறுதியானது!

விஜய்-சன் பிக்சர்ஸ் கூட்டணி உறுதியானது!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக, சன் டிவி-யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மெர்சல் திரைப்படம் ரிலீஸாவதற்கு முன்பே முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார் விஜய். அதேசமயத்தில் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் படத்தையும் முருகதாஸ் முடித்திருக்க, அதன் கதை உருவாக்கத்தில் ஈடுபட்டார். பிரம்மாண்டத்துக்கு பெயர் பெற்ற சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரிப்பதாக மின்னம்பலத்தில், கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம். அந்தத் தகவலை தற்பொழுது உறுதி செய்திருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

முருகதாஸுடன் மூன்றாவது முறையாக இணையும் விஜய் இம்முறை வேறுமாதிரியான கதையைக் கேட்டிருக்கிறார். அதாவது முருகதாஸ் மற்றும் விஜய்யின் வழக்கமான, பாதுகாப்பான இடத்திலிருந்து விலகி சமூகத்தில் அடிமட்ட மக்களில் ஒருவனாக தனது கேரக்டரை நிறுவச் சொல்லியிருக்கிறார். அப்படி என்ன கதைக்களமாக இருக்கும்?

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon