மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

மீனவர்கள் 4 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!

மீனவர்கள் 4 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் நான்கு நாட்களுக்குக் கடலுக்கு செல்லவேண்டாம் என வானிலை மையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. அது வலுவடைந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழகம், ஆந்திராவை நோக்கி நகரக் கூடும். இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். கனமழைக்கு வாய்ப்பு இல்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் 4 நாட்கள் மீன்பிடிக்கக் கடலுக்கு செல்ல வேண்டாம். ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் இன்று (டிசம்பர் 05) செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.

மேலும் ஓகி புயலின் போது கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இன்னும் முழுமையாகக் கரை திரும்பவில்லை. காணாமல் போன உறவினர்கள் எப்போது வீடு திரும்புவார்கள் என்று மீனவர்களின் உறவினர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஓகி புயல் நேரத்தில் கடலில் மாயமான 2,864 மீனவர்களில் 2,604 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon