மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

தொப்பி சின்னம்: ஓபிஎஸ் கேவியட் மனு!

தொப்பி சின்னம்: ஓபிஎஸ் கேவியட் மனு!

தொப்பி சின்னம் குறித்து தினகரன் மேல் முறையீடு செய்தால் எங்களை கேட்காமல் முடிவெடுக்கக்கூடாது என ஓபிஎஸ் சார்பில் இன்று (டிசம்பர் 5) டெல்லி உயர் நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 1ஆம் தேதியன்று இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கு வழங்கப்பட்டது குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சசிகலாவின் உறவினரான தினகரன் வழக்கு தொடர்ந்தார். அதோடு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனக்கு தொப்பி சின்னம் வழங்க வேண்டுமென்றும் மனு அளித்திருந்தார்.

நேற்று (டிசம்பர் 4) தொப்பி சின்னம் குறித்தான மனு உடனடியாக விசாரணைக்கு வந்தது. இதில் உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டுமென்று தினகரன் வழக்கறிஞர்கள் கோரினர். விசாரணை முடிவில், தொப்பி சின்னத்தை யாருக்கு வழங்குவது என்று ஆர்.கே.நகர் தொகுதிக்கான தேர்தல் அலுவலர் முடிவு செய்வார் என்று தெரிவித்தது டெல்லி உயர் நீதிமன்றம். இந்த தீர்ப்பை எதிர்த்து தினகரன் சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், இன்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கு தொடர்பாக தினகரன் மேல் முறையீடு தாக்கல் செய்தால், தங்களது தரப்பைக் கேட்காமல் முடிவெடுக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, தினகரன் தரப்பிலிருந்து தொப்பி வழக்கு மேல்முறையீடு குறித்தான தகவல் ஏதும் வெளியாகவில்லை.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon