மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

ஓகி: தமிழகத்தில் 10 பேர் பலி!

ஓகி: தமிழகத்தில் 10 பேர் பலி!

ஓகி புயலால் தமிழகத்தில் 10 பேர் உயிரிழந்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 30ஆம் தேதி கன்னியாகுமரி கடல் பகுதியில் ஓகி புயல் உருவானது. இதனால் கன்னியாகுமரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் சூரைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் பெரும் சேதங்களைச் சந்தித்தது. ஏராளமான மரங்களும், மின் கம்பங்களும் வேரோடு சாய்ந்தன. வீடுகளிலும் சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சார வசதி இல்லாமல் நான்கு நாட்களாக இருளில் தவித்து வந்தனர், மக்கள். அத்தியாவசிய பொருட்களும் கிடைக்காமல் பெரும் அவதிப்பட்டனர். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் புயலின் காரணமாக சிலர் இறந்தார்கள். இந்நிலையில் ஓகி புயலால் தமிழகத்தில் 10பேர் உயிரிழந்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று (டிசம்பர் 05) வெளியான அறிக்கையில், ‘ஒகி புயலுக்கு தமிழகத்தில் 10 பேரும், கேரளாவில் 29 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த 74 மீனவர்களும், கேரளாவைச் சேர்ந்த 93 பேரும் மாயமாகியுள்ளனர். தமிழகத்தில் 4 மாவட்டங்களும், கேரளாவில் 8 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2,802 பேரும், கேரளாவில் 33 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டனர்' என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon