மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

நமக்கு வெள்ளிந்தி மனசுங்க :அப்டேட்குமாரு

நமக்கு வெள்ளிந்தி மனசுங்க :அப்டேட்குமாரு

‘எங்க அம்மா சத்தியமா நானும் ரௌடி தான் சார்’ன்னு வாண்ட்டடா வந்து வண்டியில ஏறப்போன தீபாவையும், விஷாலையும் இறக்கிவிட்டுட்டு வண்டியை பத்திட்டாங்க. அடுத்து நடந்ததெல்லாம் ஆக்சன் சீக்வென்ஸ் தான். விஷால் உடனே சாலை மறியல் பண்ண ஆரம்பிக்க, போலீஸ் வந்து தூக்கிட்டு போயிட்டாங்க. உடனே கூட இருந்தவங்க எல்லாம் ஒரு தலைவன் உருவாகிறான்ங்குற ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. நியூஸ் சேனல் பார்க்கிறமா இல்ல பேரரசு படம் பார்க்குறமான்னு கன்பியூஸ் ஆகிட்டேன். ஆனா மீடியாவுக்கும் விஷாலுக்கும் நல்லா ராசி ஒத்து போகுது. அவரால இவங்களும் இவரால அவங்களும் ரொம்ப நல்லா இருக்காங்க.

மெரினா பக்கம் கூட்டமா போனாலோ கருப்பு சட்டை போட்ருந்தாலோ வளைச்சு வளைச்சு அரெஸ்ட் பண்ணாங்களே இப்போ பழனிசாமியும் பன்னீர் செல்வமும் கருப்பு சட்டை போட்டு கூட்டமா போய் துக்கம் கொண்டாடிட்டு வாறாங்க, போலீஸ்காரங்க எல்லாம் பாதுகாப்பு கொடுக்குறாங்கன்னு வெள்ளிந்தியா ஒருத்தரு இன்பாக்ஸ்ல வந்து கேக்குறாரு. அவரை விடவும் காணாமப் போன மீனவர்கள் மொத்தம் எத்தனை பேருன்னு கூட இன்னும் கணக்கெடுக்காத இந்த அரசு தான் கண்டுபிடிச்சு கொடுக்கும்னு நம்பிகிட்டு இருக்கோமே நாம எவ்வளோ வெள்ளிந்தின்னு பாருங்க.

@Sathik_143

வெள்ளாட்டு மந்தைகளாக இருந்தவர்கள்...,

இன்னைக்கு கறுப்பாட்டு மந்தைகளாக மாறினார்கள்....!

@udanpirappe

அதிமுக தொண்டர் :அம்மா பழகுறதுக்கு எளிமையானவங்க

Me : அப்படியா..அந்தம்மாவ எங்க பார்த்த ?

அதிமுக தொண்டர் :ஹெலிகாப்டர்ல

@aysha_yusuff

பாத்திரம் துணிமணி பளபளக்க விம், டைட்ளாம் இனித் தேவையில்லை......

நம்மல இளக்காரம பேசுவோரை நினைத்து அடிச்சுத் துவைச்சி, தேயுங்க.....

அடடே , என்னவொரு பளபளப்பு மினுமினுப்பு......

சொந்த அனுபவம்

@கருப்பு கருணா

176 பேர்தான் காணாமல் போய்ட்டாங்கன்னு சொன்னதும் பொய்.

2000 பேரை மீட்டிருக்கோம் என்பதும் பொய்..

நாளை 8000 பேருக்கு நிவாரணம் கொடுத்தோம்ன்னு சொல்லப்போவதும் பொய்...

பொய்யரசு போய் தொலையட்டும்..

ஆர் கே நகரிலிருந்து ஆட்டம் தொடங்கட்டும்!

@SoonaaPaanaa

இப்ப மட்டும் அவங்க உயிரோட இருந்திருந்தா....

ஜெயில்ல இருந்திருப்பாங்க அட போங்கடா

@Prabakar Kappikulam|

ஒரு வாரம் கடந்தும் காணாமல் போன மீனவர்கள் #எண்ணிக்கையைக் கூட கண்டுபிடிக்க முடியாத அரசுதான்...

காணாமல் போன #மீனவர்களை கண்டுபிடித்து தருவார்கள் என்று நம்பி காத்திருக்கிறோம்...

@udanpirappe

வீட்டுல குழந்தைகளுக்கு திருடக்கூடாதுனு சொல்லி கொடுத்துட்டு,

சமாதி பக்கம் கூட்டிட்டு போய்ட்டு இருக்கானுங்க.

அடேய் ஏதாவது ஒன்னை சொல்லிக்கொடுங்கடா.

Shan Karuppusamy

"நான் நினைச்சா உன்னோட இடத்துக்கு அதாவது தலைவன் அப்படிங்கற இடத்துக்கு ஈசியா வந்துட முடியும். ஆனா நான் என்னிக்குமே தொண்டன்தான்"

1990ல் வந்த பணக்காரன் படத்தில் ரஜினி வசனம்.

30 வருசமாவா கோலம் போடுது மொமண்ட்.

@Prabakar Kappikulam

ரகுபதி பிணத்தில் தொடங்கி

மீனவர்கள் பிணத்தில் முடிந்தது

கோவை_எம்ஜிஆர்_நூற்றாண்டுவிழா

@கருப்பு கருணா

125 கோடி இந்தியர்கள்தான் எனக்கு கடவுள் : மோடி

நான் சொல்லல..இது கடவுளையே விக்குற கும்பலுன்னு..இப்ப சரியாப்போச்சா..!!

@Pa_Siva

மெரினாவுல ஊர்வலம் போராட்டம் நடத்த தடை இருக்குத்தானே? A1 நினைவு ஊர்வலத்துக்கு எப்படி அனுமதி கொடுத்தாங்க அதுவும் கருப்புச்சட்டையோட..

@iamkarthikeyank

ஒரு ஜென் தத்துவம் என்ன சொல்கின்றது என்றால் எதுவோ, எவனோ(ளோ), என்ன சொன்னா என்ன, உன் வேலைய ஒழுங்கா பாரு, ஓஹோனு இருக்கும் உன் வாழ்க்கை

@senthilcp

புல்லட் ரயில் திட்டத்தை எதிர்ப்பவர்கள் மாட்டு வண்டியில் போகட்டும் - மோடி # மாட்டு வண்டில போலாம்னா சாலை சரி இல்லையே, அதை முதல்ல ரெடி பண்ணுங்க

@HAJAMYDEENNKS

ஜெ.தீபாவின் வேட்புமனு நிராகரிப்பு -செய்தி #

ஒரு குழந்தையை இப்படி கொடுமைப்படுத்தலாமா !

@வாசுகி பாஸ்கர்

ஒண்ணு மட்டும் உறுதியா சொல்ல முடியும். 2016 திமுக வென்று இருந்தால், ஜெயா மரணத்திருக்க மாட்டார்.

@Shan Karuppusamy

வாட்ஸ் ஆப் குழுமங்களில் படங்கள் வீடியோக்கள் பகிரும்போது நிர்வாகியின் ஒப்புதலுடன் மட்டுமே பகிரும் முறை வரவிருக்கிறதாம். நிம்மதிப் பெருமூச்சு. ஆனால் நமது முட்டாள்களல்லாத முன்னோர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை இருட்டடிப்பு செய்யும் அன்னிய சதியின் ஒரு அங்கமாக இது இருக்குமோ என்ற ஐயப்பாடு எழுகிறது.

@Prabakar Kappikulam

இந்திய பொருளாதாரம் என்றால் என்ன..?

இந்திய பொருளாதாரம் என்பது யாதெனில் டாடா, பிர்லா, மிட்டல், அம்பானி என்று தொடங்கி உள்ளூர் தொழில் அதிபர்கள் வரை பரவலாக இருந்த வணிகத்தை முடக்கி, Fortune அதானி, பதஞ்சலி ராம்தேவ் என்ற இருபெரும் தொழிலதிபர்களை மட்டுமே வளர்த்தெடுப்பது.

@writercsk

ஆஃபாயில்களை இனங்காண்பது எளிது. ஜெயலலிதாவை ஃபெமினிஸ்ட் என்பார்கள்.

@abuthahir707

மாதச் சம்பளம் கைக்கு வந்தும் இருக்குற கடனை அடைப்பவர்கள விட நெட்டுக்கு ஈசி பன்றவங்க அதிகமாகிட்டாங்க

@கருப்பு கருணா

பிரதமரின் பணிகள் என்ன சார்..?

பத்து லட்ச ரூபாயில் கோட்டுபோட்டுக்கிட்டு நாடுநாடா போயி நம்மள அடமானம் வச்சிட்டு செல்ஃபி எடுத்துக்குறது..!

அப்புறம்..?

குஜராத் எலக்‌ஷன்ல வார்டு எலக்‌ஷன் கணக்கா ஊடு ஊடா போயி ஓட்டு கேக்குறது..!

அப்புறம்..?

அப்பப்ப நான் டீ வித்தவன்னு பீத்திகிறது..!

அப்புறம்..?

இது எல்லாத்தையும் ஒரே நேரத்துல செங்கோட்டையில் கொடியேத்திட்டு அடிச்சி உடுறது..

அய்யே...அவ்ளோதானா..இதுக்குதானா இம்மாம் பில்டப்பு!

-லாக் ஆஃப்

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon