மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

ஊட்டி மலை ரயில் நான்காவது நாளாக ரத்து!

ஊட்டி மலை ரயில் நான்காவது நாளாக ரத்து!

ஊட்டி மலை ரயில் இன்று (டிசம்பர் 5) நான்காவது நாளாக ரத்து செய்யப்பட்டது.

ஒகி புயலால், நீலகிரி மாவட்டம் குன்னுார், கோத்தகிரி மலைப்பகுதிகளில் கனமழை பெய்தது. மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் பாதையில் கல்லாறு -ஹில் குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே 10க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரயில் போக்குவரத்து 3 நாட்கள் ரத்து செய்யப்பட்டது. 30க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இன்று முதல் மலை ரயில் போக்‍குவரத்து மீண்டும் தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. ஆனால், நேற்று மாலை கல்லாறு -ஹில் குரோவ் மலை ரயில் பாதையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. பாறைகள் உருண்டு ரயில் பாதையில் விழுந்தது. ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து பாறைகளை வெடிவைத்துத் தகர்த்து அப்புறப்படுத்துகின்றனர்.

ஊட்டியில் தற்போது மழை இல்லை என்றாலும், நேற்று இரவு மிதமான மழை பெய்தது. எனவே, மலை ரயில் போக்குவரத்து இன்று நான்காவது நாளாக ரத்து செய்யப்பட்டது. ஆனால் குன்னூர்- ஊட்டி இடையே மலை ரயில் வழக்கம் போல் இயக்கப்படுகிறது.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon