மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 20 பிப் 2020

சர்க்கரை உற்பத்தி 56% உயர்வு!

சர்க்கரை உற்பத்தி 56% உயர்வு!

சிறப்பான பருவமழை காரணமாக மகாராஷ்டிர மாநில சர்க்கரை ஆலைகள் இந்த ஆண்டில் 56 சதவிகிதம் கூடுதலான அளவில் சர்க்கரையை உற்பத்தி செய்துள்ளன.

கடந்த பருவத்தில் 104.11 லட்சம் டன் அளவிலான கரும்புகள் மட்டுமே நசுக்கப்பட்டு சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் 166.55 லட்சம் டன் அளவிலான கரும்புகள் நசுக்கப்பட்டு சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மேலும், சர்க்கரை உற்பத்தியை எடுத்துக் கொண்டால் கடந்த ஆண்டில் 99.11 லட்சம் குவிண்டாலிலிருந்து 154.99 லட்சம் குவிண்டாலாக அதிகரித்துள்ளது. இது 56 சதவிகித உயர்வாகும். கடந்த ஆண்டில் போதிய பருவமழை இல்லாததால் வெறும் 138 ஆலைகள் மட்டுமே டிசம்பர் மாதத்தில் சர்க்கரை உற்பத்திப் பணியில் ஈடுபட்டிருந்தன. ஆனால் இந்த ஆண்டில் 171 ஆலைகள் சர்க்கரை உற்பத்திப் பணியில் ஈடுபட்டுள்ளன.

மகாராஷ்டிராவின் சர்க்கரை உற்பத்தியின் ஏழு முன்னணிப் பகுதிகளில் புனேவில் அதிகபட்சமாக 66.10 லட்சம் டன் அளவிலான கரும்புகள் சர்க்கரை உற்பத்திக்குத் தயாராகவுள்ளன. அதைத் தொடர்ந்து கோலாப்பூரில் 38.55 லட்சம் டன் கரும்புகள் சர்க்கரை உற்பத்திக்குத் தயார்படுத்தப்பட்டுள்ளன. 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நிலவிய கடும் வறட்சியால் கரும்பு பயிரிடும் பரப்பு குறைவாகவே இருந்தது. ஆனால் இந்த ஆண்டில் பருவமழை சிறப்பாக இருந்ததால் கரும்பு உற்பத்தி அதிகமாக இருந்தது. அதனால் சர்க்கரை உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon