மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 20 பிப் 2020

டிசம்பர் 7ல் அரையாண்டு தேர்வு!

டிசம்பர் 7ல் அரையாண்டு தேர்வு!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு டிசம்பர் 7ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்குகிறது.

இந்த ஆண்டு அரையாண்டு தேர்வுக்கான அட்டவணைகளை பள்ளிக் கல்வித்துறை கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டது. அதன்படி, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதியுடன் முடிகிறது. அதில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி தேர்வுகள் தொடங்குகிறது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் பொது வினாத்தாள் மூலமாக அனைத்துப் பள்ளிகளிலும் தேர்வுகள் நடக்கும் எ என்பதால், அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரே கேள்வித்தாள் அனுப்பும் பணி தொடங்கியது.

அதேபோல், 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கணினி கல்வி கொண்டு வரப்பட்டு அதற்கான பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், வகுப்புகளுக்குக் கணினி வழங்கப்படாததால் இந்தப் பாடங்கள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை தேர்வுக்கான வினாத்தாள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon