மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

பேட்டரி பேக் வசதியுடன் மின் நிலையம்!

பேட்டரி பேக் வசதியுடன் மின் நிலையம்!

ஆந்திரப் பிரதேச அரசு 160 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்தி பூங்கா ஒன்றை பேட்டரி பேக் அப் வசதியுடன் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

சோலார் மற்றும் காற்றாலை இரண்டும் இணைந்து பேட்டரி பேக் அப் வசதியுடன் அமைக்கப்படும் நாட்டின் முதல் பெரிய மின் நிலையம் இதுவாகும். இதுகுறித்து ஏ.பி. சோலார் கார்பரேசன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.ஆதிசேசு பிசினஸ் லைன் ஊடகத்திடம் கூறுகையில், "இதுதான் இந்தியாவின் பெரிய அளவிலான சோலார் மற்றும் காற்றாலை மின் நிலையத் திட்டமாகும். ஏற்கனவே அந்தமானில் 28 மெகா வாட் பேட்டரி பேக் அப் வசதியுடன் மின் உற்பத்தி செய்யும் மின் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதை என்.டி.பி.சி இயக்கி வருகிறது.

தற்போது ஆந்திர மாநிலம் அனந்தபூரில் 160 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் மின் நிலையம் அமைக்கப்படுகிறது. இதில் 120 மெகா வாட் மின்சாரம் சோலார் மூலமும், காற்றாலை மூலம் 40 மெகா வாட் மின்சாரமும் தயாரிக்கப்படவுள்ளது. இதில் 40 மெகா வாட் மின்சாரத்தை பேட்டரி பேக் அப் செய்து கொள்ளலாம். பேட்டரி பேக் வசதி ஏற்படுத்தும் திட்டத்திற்கு உலக வங்கி நிதியளிக்கிறது. மேலும் இந்தத் திட்டத்திற்கு 750 முதல் 800 ஏக்கர் நிலம் வரை தேவைப்படுகிறது. நிலம் கையகப்படுத்தும் பணியை சோலார் எனர்ஜி கார்பரேசன் மேற்கொள்கிறது" என்றார்.

அண்மையில் டெஸ்லா நிறுவனம் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ்டவுனில் 100 மெகா வாட் மின்சாரத்தை பேட்டரி பேக் அப் வசதியுடன் தயாரிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon