மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

கூகுள் தந்த தீர்வு!

கூகுள் தந்த தீர்வு!

ஆன்ட்ராய்டு பயன்படுத்தும் பல்வேறு பயனர்களுக்கு பேட்டரி குறைவது குறித்த கவலை எப்போதும் இருந்து வருகிறது. அதற்குத் தீர்வாக அதிக பேட்டரி சக்திகளைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை பயனர்கள் வாங்க முடிவெடுக்கின்றனர். மேலும் சிலர் பவர் பேங்க் போன்றவற்றினை உடன் எடுத்துச் செல்கின்றனர். ஆனால் பெரும்பாலும் இதற்குக் காரணமான அப்ளிகேஷன்களை பற்றிய விழிப்புணர்வு பயனர்களுக்கு கொடுகப்படவில்லை.

பேக்கிரவுண்டில் இயங்கும் அப்ளிகேஷன் தான் இதற்கு காரணம் என பயனர்களுக்கு தெரிந்தாலும், அதனைக் குறைக்க வழி தேடியபடியே உள்ளனர். அதற்கு புதிய தீர்வாக கூகுள் நிறுவனம் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி தேவையற்ற விளம்பரங்களைப் பயனர்களின் ஸ்மார்ட்போன்களின் லாக் ஸ்க்ரீன்களில் காண்பிக்கும் அப்ளிகேஷன்களை தடை செய்து இந்தப் பிரச்சினையிலிருந்து பயனர்கள் விடைபெறலாம்.

பெரும்பாலான அப்ளிகேஷன்களில் போன்களை லாக் செய்த பிறகும் பின்புறத்தில் செயல்படும் அளவிற்கு சாஃப்ட்வேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவும் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி சக்தி விரைவில் முடிவதற்கு காரணமாக உள்ளது. எனவே இதுபோன்ற அப்ளிகேஷன்களை தடை செய்துள்ளது கூகுள் நிறுவனம். ஆன்ட்ராய்டு என்ற ஒன்றினை எடுத்துக்கொண்டால் அது ஒரு வெளிப்படையான இயங்குதளம். எனவே பல்வேறு நபர்களும் இதற்கான அப்ளிகேஷன்களை தயாரித்து வெளியிட முடியும். ஆனால் சரியானவற்றினை தேர்வு செய்து பயன்படுத்துவதால் மட்டுமே இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.

நம்பகத்தன்மை கொண்ட அப்ளிகேஷன்களை மட்டும் தற்போது கூகுள் நிறுவனம் அதன் பிளே-ஸ்டோரில் பயன்பாட்டிற்கு வழங்கி உள்ளது.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon