மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 டிச 2017

30,000 பேருக்கு மீண்டும் தேர்வு!

30,000 பேருக்கு மீண்டும் தேர்வு!

தொலைநிலை கல்வி திட்டம் மூலம் பொறியியல் படித்த 30,000 பட்டதாரிகள் பட்டத்தை செல்லுபடியாக்க, மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்பை தொலைநிலை கல்வி திட்டம் மூலம் வழங்கக்கூடாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிமுறை கூறுகிறது. ஆனால், சில தனியார் மற்றும் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற பல்கலைகள், தொலைதூர கல்வி திட்டத்தில், பிஇ, பிடெக், உள்ளிட்ட தொழில்நுட்ப பட்டங்களை வழங்குவதாகப் புகார் எழுந்தது.

இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏகே.கோயல், உதய் லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நவம்பர் 3ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “தொலைதூர கல்வி திட்டத்தில், தொழில்நுட்ப கல்வி கற்பிப்பதை ஏற்க முடியாது. பல தனியார் பல்கலைகள் தொலைதூர கல்வி திட்டத்தில், பிஇ, பிடெக், பட்டங்களை வழங்கியுள்ளன. அது செல்லாது வரும், 2018 - 19 கல்வி ஆண்டு முதல் இவ்வகை கல்வி திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்படுகிறது. உதய்பூரில் உள்ள ஜேஆர்என் ராஜஸ்தான் வித்யாபீட், ராஜஸ்தான் சுரு மாவட்டத்தில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் அன்வான்ஸ்ட் ஸ்டீஸ் இன் எஜூகேசன், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலகாபாத் அக்ரிகல்ச்சரல் இன்ஸ்டிடியூட், தமிழகத்தில் உள்ள விநாயகா மி‌ஷன்ஸ் ரிசர்ச் ஃபவுண்டேசன் ஆகிய நிகர் நிலை பல்கலைக்கழகங்களில் 2001 முதல் 2005 வரை தொலைதூர கல்வி திட்டத்தில் வழங்கப்பட்ட அனைத்துத் தொழில்நுட்ப பட்டங்களும் ரத்து செய்யப்படுகின்றன. இந்த 4 நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட ஒப்புதல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகங்கள் மாணவர்களிடமிருந்து கட்டணமாக பெறப்பட்ட தொகையை 2018 மே 31 ஆம் தேதிக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். ஏற்கனவே பட்டம் பெற்ற மாணவர்களின் நலன் கருதி, அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்படும். அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான ஏஐசிடிஇ சார்பில் நடத்தப்படும் ஸ்கிரீனிங் டெஸ்டில், அவர்கள் வெற்றி பெற வேண்டும். 2018 அவர்களுக்கு வழங்கப்படும் இரண்டு வாய்ப்புகளையும் ஜனவரி 15 ஆம் தேதிக்கு முன்னர் பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும்” என அவர்கள் உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், தொலைநிலை கல்வி திட்டத்தில் வழங்கிய பொறியியல் பட்டங்களைப் பல்கலைக்கழக மானியக்குழு நிறுத்தி வைத்தது. இதனால், இந்த நிறுவனங்களின் வாயிலாக பொறியியல் பட்டம் பெற்ற சுமார் 30,000 பொறியியல் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

5 நிமிட வாசிப்பு

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

2 நிமிட வாசிப்பு

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

4 நிமிட வாசிப்பு

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

செவ்வாய் 5 டிச 2017