மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

விண்வெளியில் பீட்சா சமையல்!

விண்வெளியில் பீட்சா சமையல்!

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் பீட்சா செய்து சாப்பிட்ட வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உலகின் பல்வேறு நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விண்வெளியில் ஈர்ப்பு விசை அற்ற நிலையில், அவர்கள் எப்படி அன்றாட வாழ்வை நகர்த்துகிறார்கள் என்பது தொடர்பாக, உடற்பயிற்சி செய்வது, தண்ணீர் அருந்துவது என பல வீடியோக்களை இதுவரை நாசா வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது ஆராய்ச்சியாளர்கள் பீட்சா செய்து சாப்பிட்ட வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் பீட்சா தயாரிக்கும் காட்சியும், பின்னர் விண்வெளியில் மிதக்கும் அந்த பீட்சாவை அனைவரும் பங்கிட்டு சாப்பிட்ட காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

வீடியோ

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon