மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

ஹாலிவுட்டிலும் கலக்கும் நெப்போலியன்

ஹாலிவுட்டிலும் கலக்கும் நெப்போலியன்

தென்னிந்திய சினிமா மட்டுமல்லாது ஹாலிவுட் சினிமாவிலும் காலடி வைத்திருக்கிறார் நெப்போலியன். தற்போது ஹாலிவுட்டில் நடித்து வரும் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரும், நெப்போலியனின் நண்பருமான டெல் கணேசன் ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார். கைபா பிலிம்ஸ் சார்பாக இவர் தயாரிக்கும் டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ் என்ற தனது முதல் ஹாலிவுட் திரைப்படத்தில் நெப்போலியனை அறிமுகம் செய்துள்ளார்.

சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படமான இதில் நெப்போலியன் மியூசிய காப்பாளர் வேடத்தை ஏற்றிருக்கிறார். இத்திரைப்படத்தை எம்மி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இயக்குநர் சாம் லோகன் கலேகி இயக்குகிறார். ஜெஸ்ஸி, ஜெஸி ஜென்சென், பாபி லேனென், ஜான். சி பார்மன், குரோவர் மெக்கேன்ட்ஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஹிப்-ஹாப் பாடகர் எமினெம்மின் இளைய சகோதரர் நாதன் மாதேர்ஸ் புலனாய்வு அதிகாரியாக அறிமுகமாகிறார். இசையமைத்ததோடு மட்டுமில்லாமல் ஸ்விப்ட்டி மக்வே நடித்திருக்கிறார். ஆடி, போர்ப்ஸ் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு விளம்பரப்படம் தயாரிக்கும் பிரபல ஒளிப்பதிவாளர் இஸ்தவன் லேட்டங் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் வெளியாகி பல தரப்பினரின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்று வருகிறது.

டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ் டீசர்

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon