மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 17 நவ 2019

எருமையின் மீது ஏறி வந்து கலெக்டரிடம் புகார்!

எருமையின் மீது ஏறி வந்து கலெக்டரிடம் புகார்!

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்க்கு ஒருவர் எருமை மாட்டின் மீது ஏறி வந்து கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று (டிசம்பர் 4) நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்க்கு பார்த்தீபன் என்பவர் நூதன முறையில் எருமை மாட்டின் மீது ஏறி வந்து கலெக்டர் ரோகிணியிடம் புகார் மனு அளித்தார். மனுதாரர் எருமை மாட்டின் மீது ஏறி வருவதை அறிந்த காவல்துறையினர் எருமையை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

பார்த்திபன் கூறுகையில், ''சேலத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகள் இன்னும் மூடப்படாமல் அப்படியே இருக்கிறது. சேலம் மாநகராட்சிக்குள் நடைபெறும் மேம்பாலப் பணிகள் நிறைவடையாமல் இடப்பதால் போக்குவரத்து நெரிசல் உருவாகி இருக்கிறது. இதனால் பல விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. சேலம் தனிக் குடிநீர் திட்டம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. சேலத்தில் உள்ள திருமணிமுத்தாறு அபிவிருத்தி பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது.

இது கொசுக்கள் உற்பத்தி நிலையமாக இருந்து வருகிறது. கலெக்டர் ரோகிணி வீடு வீடாகச் சென்று கொசுகள் உற்பத்தி ஆகும் வகையில் தண்ணீர் வைத்திருந்தால் அபராதம் விதித்தார். ஆனால் சாக்கடையாக இருக்கும் திருமணிமுத்தாறில் கொசு ஒழிப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். மொத்தத்தில் சேலம் மாவட்ட நிர்வாகம், சேலம் மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை அனைத்தும் முடங்கிப் போய் செயல்படாமல் இருந்து வருகிறது. அதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் 'எருமை மாடு எப்படி மந்தமாக நடந்து வருமோ அதைப்போல மாநகராட்சி நிர்வாகமும் மந்தமாகச் செயல்பட்டு வருகிறது' என்பதை உணர்த்துவதற்க்காக இவ்வாறு வந்தாக கூறினார்.

பின்பு இந்த எருமையை என்னுடையது இல்லை. கால்நடை மருத்துவமனைக்குக் கூட்டி வந்தவரிடம் இருந்து எருமையைக் கேட்டு வாங்கி வந்ததாகக் கூறினார்.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon