மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

கபடி கதைக்களத்தில் மற்றொரு படம்!

கபடி கதைக்களத்தில் மற்றொரு படம்!

கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு ‘அருவா சண்ட’ என்ற புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.

வெண்ணிலா கபடிக்குழு, கில்லி என சில படங்கள் கபடி விளையாட்டை பின்புலமாகக் கொண்டு வெளியாகி வெற்றிப்படமாகியுள்ளன. அந்த வரிசையில் இணைய உள்ளது ஆதிராஜன் இயக்கும் அருவா சண்ட. கபடி விளையாட்டில் மாநில அளவில் பதக்கம் வென்ற ராஜா கதாநாயகனாக நடிக்கிறார். விழா படத்தின் மூலம் கவனம் ஈர்த்த மாளவிகா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார்.

படம் குறித்து இயக்குநர் ஆதிராஜன் டெக்கான் கிரானிக்கலுக்கு அளித்த பேட்டியில், “படத்திற்காக சில கபடி தொடர்களை நேரடியாக பதிவு செய்தோம். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதையை அமைத்துள்ளோம். அருவா சண்ட திரைப்படம் ஆணவக் கொலை அவலத்தையும் பேசும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன் இதுவரை ஏற்றிராத வேடத்தில் உருக்கமாக நடித்திருக்கிறார். திரைக்கதை மற்றும் வசனம் முழுவதும் உயிர்ப்புடன் இருப்பதாக சரண்யா கூறியுள்ளார்.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon