மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

தேர்வு கட்டணம் செலுத்த வாய்ப்பு!

தேர்வு கட்டணம் செலுத்த வாய்ப்பு!

குரூப் 4 தேர்வுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்த வரும் டிசம்பர் 15ஆம் தேதி கடைசி நாள் என டிஎன்பிஎஸ்சி நேற்று (டிசம்பர் 4) அறிவித்துள்ளது.

கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) பதவிக்கான தேர்வு குரூப் 4 தேர்விலேயே இணைத்து நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி நவம்பர் 2 ஆம் தேதி அறிவித்தது. தற்போது குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு டிசம்பர் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வெண்டும். தேர்வுக் கட்டணத்தை டிசம்பர் 15ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து பழங்குடியினர், பட்டியல் வகுப்பினர், அருந்ததியர், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவத்தினர் இரண்டு முறை தேர்வுக் கட்டணச் சலுகையினை பயன்படுத்திக்கொள்ளலாம். பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (இஸ்லாமியர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோர் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் அரசாணையின்படி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே, மூன்று முறை தேர்வுக் கட்டணச் சலுகையினை பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் குரூப் 4 தேர்வுக்குத் தவறுதலாக தேர்வுக் கட்டணச் சலுகை கோரி விண்ணப்பித்து, இப்போது தேர்வுக் கட்டணம் செலுத்த விரும்புபவர்கள் தங்களது விருப்பத்தினை மாற்றி தேர்வுக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு இது பொருந்தாது. இது ஒருமுறை வாய்ப்பாக மட்டுமே அளிக்கப்படும். தற்போது தேர்வுக் கட்டணச் சலுகையின் விருப்பத்தை மாற்றி தேர்வுக் கட்டணம் செலுத்துபவர்கள், அடுத்த தேர்வுகளுக்கு விருப்பத்தினை மாற்றி தேர்வுக் கட்டணச் சலுகையை மீண்டும் கோர முடியாது.மேலும் தங்களது விருப்பத்தினை மாற்றிய பின் தேர்வுக் கட்டணம் செலுத்தாமலோ அல்லது தொழில்நுட்பக் காரணம் உட்பட பல்வேறு காரணங்களினால் தேர்வுக் கட்டணம் செலுத்த முடியாமல் போனாலோ அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

எனவே விண்ணப்பதாரர்கள் தாங்கள் செலுத்திய கட்டணமும் விண்ணப்பமும் தேர்வாணையத்தால் ஏற்கப்பட்டுள்ளதா, என்பதைத் தேர்வாணையத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளவேண்டும்.

இந்தச் சலுகை கடந்த நவம்பர் 14ஆம் தேதி வெளியான தொகுதி 4 அறிவிப்பு மற்றும் இதன் பின்னர் அறிவிக்கப்படும் அறிவிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon