மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

கலகலப்பு 2: லேட்டஸ்ட் அப்டேட்!

கலகலப்பு 2: லேட்டஸ்ட் அப்டேட்!

கலகலப்பு படத்தை அடுத்து அதன் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் கலகலப்பு 2 படத்தை மிகத் துரிதமாக முடித்திருக்கிறார் சுந்தர்.சி.

சங்கமித்ரா படத்தைத் தொடங்குவதற்கு முன்பாக கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை டிசம்பருக்குள் முடித்து விடுவார் என குஷ்பு ஏற்கனவே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதே போலவே சுந்தர்.சி இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்திருக்கிறார்.

காரைக்குடியில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு அதன் பின்னர் காசி பனாரஸில் நடைபெற்றது. சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தது, தற்போது அதுவும் முடிவடைந்துள்ளதாக ஜீவா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.

காமெடி திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தை சுந்தர்.சியின் அவ்னி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் ஜீவா, சிவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரோபோ சங்கர், மனோபாலா, வையாபுரி உள்ளிட்ட காமெடி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் முக்கிய கேரக்டரில் நடிக்க நந்திதா இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon